)
Ahmedabad Plane Crash: ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. அதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 242 பயணிகள் இருந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில், குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி, சீட் நம்பர் 12ல் பயணித்ததாக கூறப்படுகிறது. விபத்தில் அவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானம் லண்டனுக்கு புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விமான நிலைய எல்லைக்கு அருகில் வெடித்துச் சிதறியது.
இதற்கிடையில் விமானம் விபத்துக்குள்ளாகு விமானம் நொறுங்கும் வீடியோ வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.
விமானம் நொறுங்கும் திக் திக் காட்சிகள்..! #AirIndia #FlightCrash #Gujarat #Ahmedabad #AI171 #PlaneCrash #BreakingNews #zeetamilnews pic.twitter.com/ZXjnRt0YGv
— Zee Tamil News (@ZeeTamilNews) June 12, 2025
முன்னதாக, ஏர் இந்தியா விமான எண் AI-171 பிற்பகல் 1.38 மணிக்கு புறப்பட்டது. பிற்பகல் 1.40 மணிக்கு விபத்துக்குள்ளானது. விமான நிலைய வளாகத்தை ஒட்டியுள்ள ஏர் கஸ்டம் கார்கோ அலுவலகம் அருகே விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்தவுடன், முழுப் பகுதியிலும் புகை மூட்டம் காணப்பட்டது.
விமானத்தில், விமானத்தின் கேப்டன் சுமித் சபர்வால், அவருடன் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் மற்றும் விமான குழுவினர் இருந்தார். கேப்டன் சுமித் சபர்வால் ஒரு எல்டிசி. அவருக்கு 8200 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்தது. துணை விமானிக்கு 1100 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்தது. எல்டிசி என்றால் லைன் பயிற்சி கேப்டன். இவர்கள் மற்ற விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் வாய்ந்த விமானிகள்.
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் (SVPIA) செய்தித் தொடர்பாளர், "விமான விபத்து காரணமாக, விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன." என கூறினார்.
மீட்புப் பணிக்காக இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பல மீட்புக் குழுக்கள் வந்துள்ளன. குஜராத் முதல்வரும் அகமதாபாத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்துக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் முதல்வர் மற்றும் காவல் ஆணையரிடம் தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் உறுதியளித்தார்.
விமானத்தின் பாகங்கள் மெகானி பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த குடியிருப்பில் விழுந்ததாக கூறப்படுகின்றது. அங்கு உடனடியாக வானத்தில் புகை மேகங்கள் எழுவதைக் காண முடிந்தது. விபத்துக்குப் பிறகு ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக சுற்றியுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ