Ahmedabad Air India Plane Crash: தீப்பிழம்பாக எரிந்த அந்த விமானத்திலிருந்து ஒருவர் தப்பித்தார் என்பது அதிசயங்களின் அதிசயமாக பார்க்கப்படுகின்றது. அவரால் எப்படி தப்பிக்க முடிந்தது? அவரது சமயோஜித புத்தி அவருக்கு உதவியதா?

Ahmedabad Air India Plane Crash: நேற்று அகமதாபாதிலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், பறக்கத் தொடங்கிய சில விநாடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்து உலகையே உலுக்கியுள்ளது. விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்த இடத்தில் பதற்றமும் பீதியும் அதிகரித்தது.
சில நிமிடங்களிலேயே அங்கு வந்த மீட்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடத்தொடங்கினர். உடல்கள் மற்றும் விபத்தில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடங்கின. விபத்து குறித்த முழு அளவிலான விசாரணை தொடங்கி நடந்து வருகின்றது.
Vishwash Kumar Ramesh: விமான விபத்தில் தப்பிய நபர்
இதுவரை, விஷ்வாஷ் குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டுமே இந்த கொடிய விபத்தில் இருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. "தாக்கக் காயங்களுடன்" அசர்வாவில் உள்ள அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ் (40), சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட பிறகு நடந்த நிகழ்வுகளை விவரித்தார்.
விமானம் புறப்பட்ட முப்பது வினாடிகளில், பயணிகள் ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளானதாகவும் விஸ்வாஷ் கூறினார். "எல்லாம் மிக விரைவாக நடந்து முந்தது," என்று அவர் தெரிவித்தார்.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்தனர். அகமதாபாத் விமான நிலையத்தின் ரன்வே 23 இல் இருந்து புறப்பட்ட விமானம், புறப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. அதன் பிறகு விமானம் தீப்பிடித்து எரிந்தது.
விமானத்தில் இருந்த பயணிகள் பற்றிய விவரங்களை வழங்குகையில், விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், ஏழு போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடியர் இருந்ததாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
தப்பித்த நபர் அமர்ந்திருந்த அந்த அதிர்ஷ்ட சீட்
தீப்பிழம்பாக எரிந்த அந்த விமானத்திலிருந்து ஒருவர் தப்பித்தார் என்பது அதிசயங்களின் அதிசயமாக பார்க்கப்படுகின்றது. அவரால் எப்படி தப்பிக்க முடிந்தது? அவரது சமயோஜித புத்தி அவருக்கு உதவியதா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
பிரிட்டிஷ் நாட்டவரான விஷ்வாஷ், ஜன்னல் இருக்கையான 11A இருக்கையில் அமர்ந்திருந்தார். போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்திற்கான seatguru.com காட்டிய அலைன்மண்டின் படி, வரிசை 11 (Row 11) அவசரகால வரிசை, அதாவது எமர்ஜன்சி ரோவாகும். சீட் 11A எமர்ஜன்சி எக்சிட் அருகில் உள்ள சீட். எமர்ஜன்சி சீட் அருகிலேயே அம்ர்ந்திருந்தாலும், இத்தனை பெரிய விபத்தின்போது, உடனடியாக அங்கிருந்து குதித்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் வந்து அதை செயல்படுத்துவதற்கு மிகப்பெரிய உடல் வலிமையும் மன வலிமையும் தேவை என நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வலிமைதான் ரமேஷ் குமாரின் உயிரை காப்பாற்றியுள்ளது.
விபத்தின் பின்னால் நடந்தவை பற்றி பேசிய விஷ்வாஷ், "நான் எழுந்த போது, என்னைச் சுற்றி உடல்கள் இருந்தன. நான் பயந்தேன்" என்று கூறினார். தன்னைச் சுற்றி விமானத்தின் துண்டுகள் இருந்ததாகவும், தான் எழுந்து அங்கிருந்து ஓடியதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது யாரோ தன்னை "பிடித்து" ஆம்புலன்சில் ஏற்றிவிட்டதாகவும் விஷ்வாஷ் கூறினார்.
தனது குடும்பத்தைப் பார்க்க இந்தியா வந்திருந்த விஷ்வாஷ், தனது சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். விஷ்வாஷ் 20 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அங்கேயே வசிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ