Ahmedabad Plane Crash Survivor Photo : குஜராத் மாநிலம் அகமாதாபத்தில் இன்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த 53 பேர், கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுகீசியர்கள் 7 பேர் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். அகமதாபாத்தில் உள்ளர் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதாவது 1.38 மணிக்கு விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி நொறுங்கியது. இதில் கல்லூரி கட்டடம் சேதமானதுடன், விமானம் முற்றிலும் எரிந்து சுக்குநூறானாது. அதனால், விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என முதலில் தகவல் வெளியானது.
ஆனால், இப்போது அந்த விபத்தில் ஒருவர் தப்பிப் பிழைத்துள்ளதாக அகமதாபாத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கொடுத்திருக்கும் விளக்கத்தில், "11A இருக்கையில் ஒருவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறப்பு எண்ணிக்கை குறித்து இன்னும் எதுவும் கூற முடியாது. விமானம் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்" என்று கூறியுள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு வயது 40. தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.
இந்திய விமான விபத்து வரலாற்றில் மிகப்பெரிய கோர விபத்தாக பதிவாகியிருக்கும் அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் இறந்துள்ளார். இந்த தகவலை மத்திய அமைச்சர் சிவசங்கர் பிரசாத் உறுதிபடுத்தியுள்ளார். விமான விபத்தால் ஏற்பட்டிருக்கும் பெருந்துயரில் பங்கெடுப்பதாகவும், இதனால் பாதிகப்பட்டிருக்கும் அத்தனை குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் சிவசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அகமதாபாத் கோர விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் விபத்துக்குள்ளான போயிங் விமானத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பு பயணித்த ஆகாஷ் வச்தா என்ற விமான பயணி, அந்த விமானத்தில் தொழில்நுட்பங்கள் சரியாக வேலை செய்யவில்லை என குற்றம்சாட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வீடியோ இப்போது வைரலாகியுள்ளது விபத்து குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல், விபத்துக்குள்ளாகியிருக்கும் போயிங் ட்ரீம்லைனர் விமானம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்தது என தெரிவித்துள்ளார். இந்த விபத்து நடந்தது ஆச்சரியமாக இருப்பதாகவும், விமானத்தில் கருப்பு பெட்டி கிடைத்த பிறகே விமான விபத்துக்கான உண்மையான தகவல் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | குஜராத் விமான விபத்து: 11 குழந்தைகள் உள்பட விமானத்தில் பயணித்தவர்களின் லிஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ