அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்!

Ahmedabad Plane Crash Total Death: அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை 170 பேர் இறந்தனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 12, 2025, 05:30 PM IST
அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்!

Reason Behind Ahmedabad Plane Crash: குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த பயங்கரமான ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியாவின் AI 171 விமானத்தில் 242 பேர் இருந்தனர். ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது இந்த பெரிய விபத்து நிகழ்ந்தது. பிரிட்டனைச் சேர்ந்த 53 பேரும் இந்த விமானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

விமான விபத்தில் 170 பேர் மரணம்

விமானத்தின் பின்புறம் ஏதோ ஒன்றில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. தகவல்களின்படி, இதுவரை 170க்கும் மேற்பட்டோர் இந்த விமான விபத்தில் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவில் மருத்துவமனைக்கு அருகில் உள்ள அகமதாபாத் ஹோர்ஸ் முகாம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன?

இந்த விமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த சோகம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மற்றும் மனம் வருந்துகிறது என்று பிரதமர் மோடி X மூலம் தெரிவித்தார். 

ஏர் இந்தியாவில் பயணம் செய்த பயணிகளின் பட்டியல்

- 169 இந்தியர்கள்

- 53 பிரிட்டிஷ் நாட்டினர்

- 7 போர்த்துகீசிய நாட்டினர்

- 1 கனடாவை சேர்ந்தவர்.

மேலும் படிக்க - LIVE சில நொடிகள்.. வெடித்துச் சிதறிய விமானம்! பறிபோன உயிர்கள்.. நடுங்க வைக்கும் பின்னணி!

மேலும் படிக்க - அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல்வர் விமானத்தில் இருந்தாரா?

மேலும் படிக்க - நேராக சென்று கொண்டிருந்த விமானம்..திடீரென விபத்துக்குள்ளாகும் காட்சி! வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News