அகமதாபாத் விமான விபத்து : பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட முக்கிய செய்தி

Ahmedabad Plane Crash, PM Narendra Modi : அகமதாபாத் விமான விபத்து நடந்த பகுதிக்கு இன்று நேரில் சென்று உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 13, 2025, 09:49 AM IST
  • அகமதாபாத் விமான விபத்து அப்டேட்
  • நேரில் செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி
  • ஏர் இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அகமதாபாத் விமான விபத்து : பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட முக்கிய செய்தி

Ahmedabad Plane Crash, PM Narendra Modi : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற கோர விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியது. இதில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். அவர் லண்டனில் உள்ள மகளை பார்ப்பதற்காக ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைவர்களும் அகமதாபாத் விமான விபத்துக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார்.

விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேரில் பார்வையிட்ட அவர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் விமான விபத்தில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருக்கிறார். ஏர் இந்தியா விமான நிறுவனம் விபத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழப்பு. ஒருவர் மட்டும் உயிர்தப்பினார்,  அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 

ஏர் இந்தியாவின் அந்த அறிக்கையில், ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நகருக்கு இயக்கப்பட்ட AI171 விமானம் விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. 12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மதியம் 13. 38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதை தெரிவித்துக் கொள்கிறோம். உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்த்துகீசிய பிரஜைகள் மற்றும் 1 கனடா நாட்டு குடிமகன்கள் அடங்குவர். உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரின், அவர்களது குடும்பத்தினரின் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகளில் மட்டுமே எங்கள் முயற்சிகள் இப்போது முழுமையாக கவனம் செலுத்துகின்றன.

கூடுதல் ஆதரவை வழங்க ஏர் இந்தியாவின் பராமரிப்பாளர்கள் குழு இப்போது அகமதாபாத்தில் உள்ளது. இந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது. மேலும் தகவல்களை வழங்க ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளது. இந்தியாவிற்கு வெளியே இருந்து அழைப்பவர்கள் +91 8062779200 என்ற எண்ணில் அழைக்கலாம். மேலும், தகவல்கள் கிடைக்கும்போது ஏர் இந்தியாவின் X தளத்தில் அப்டேட்டுகளை கொடுக்கும் என கூறியுள்ளது. 

மேலும் படிங்க: MAYDAY என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்? முழு அர்த்தம்..

மேலும் படிங்க: குஜராத் விமான விபத்து: பலியானவர்களுக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News