குஜராத் மாநிலம், அகமதாபத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜூன் 12ஆம் தேதி லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விமான விபத்துக்குள்ளானது. விமானிகள், விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் 242 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்திருந்தனர். மேகானி என்ற பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவரை தவிர்த்து மற்ற 241 போரும் உயிரிழந்தனர். மருத்துவ கல்லூரி விடுதியில் 5க்கும் மேற்பட்ட மாணவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விபத்துக்கான காரணங்களை குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். டாடா நிறுவனம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் அளித்துள்ளது. இந்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளான காரணங்கள் குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட முன்னாள் விமானி ஒருவர், இரட்டை எஞ்சின் செயலிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறி இருந்தார். இப்படி பலரும் பல கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தற்போது மற்றொரு தகவலும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது விமானி ஒருவரின் இருக்கை லாக் ஆகாமல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி இருக்கையை பின்னோக்கி நகர்த்தி கட்டுப்பாட்டு கருவியை கட்டுப்படுத்த முடியாமல் பின்னோக்கி இழுத்ததாகவும் அப்போது நடுவானில் விமானம் பயணிக்கும் ஐடில் நிலையை அடைந்ததால், விமானத்தில் எஞ்ஜின் வேகம் உடனடியாக குறைந்ததாகவும், அதனை சக விமானி கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நிலையில், அது தோல்வி அடைந்ததால், விமான விபத்துக்குள்ளானது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், இந்த தகவல் தவறானது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைத்தளத்தில் பரவி வரும் இந்த தகவல் தவறானது. இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் படிங்க: ஈரானை தாக்க அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா? @PIBFactCheck
மேலும் படிங்க: 1 மணி நேரத்திற்கு ரூ. 200 கட்டணம்! கபேவில் ஜோடிகளுக்கு இருட்டு அறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









