அகமதாபாத் - லண்டன்: விபத்துக்கு பின் புறப்பட்ட முதல் விமானமும் திடீர் ரத்து... Air India-க்கு என்னாச்சு?

Air India 159 Flight Cancelled: ஜூன் 12 விமான விபத்துக்கு பின், அகமதாபாத் - லண்டன் செல்ல இருந்த முதல் ஏர் இந்தியா விமான சேவையையும் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2025, 02:42 PM IST
  • இந்த விமானம் இன்று மதியம் லண்டன் புறப்பட இருந்தது.
  • 200 பயணிகள் இதில் முன்பதிவு செய்திருந்தனர்.
  • கடைசி நேரத்தில் விமான சேவை ரத்து என அறிவிப்பு.
அகமதாபாத் - லண்டன்: விபத்துக்கு பின் புறப்பட்ட முதல் விமானமும் திடீர் ரத்து... Air India-க்கு என்னாச்சு?

Air Flight 159 Flight Cancelled: கடந்த ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமானநிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ-171 போயிங் டிரீம்லைனர் 787-8 விமானம் விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 650 அடிக்கு மேல் எழ முடியாமல், பிஜே மருத்துவமனையின் மருத்துவ மாணவர்கள் விடுதி கட்டடத்தில் மோதியது.

Add Zee News as a Preferred Source

Air Flight 159 Flight Cancelled: மொத்தம் 274 பேர் உயிரிழப்பு

இதனால், விமானத்தில் இருந்த 230 பயணிகள், 10 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் உள்பட 242 பேரில் 241 பேர் உயரிழந்தனர். 11 A இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் இருந்த 33 பேரும் உயிரிழந்த நிலையில், விமான விபத்தில் மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமான விபத்து குறித்து விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விமானத்தில் 169 இந்தியர்கள் மட்டுமின்றி 53 இங்கிலாந்து நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டவர் மற்றும் ஒரு கனடா நாட்டவர் உள்ளிட்டோரும் இருந்துள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து, 34 போயிங் டிரீம்லைனர் 787 விமானங்களை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அகமதாபாத் - லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Air Flight 159 Flight Cancelled: 200 பயணிகள் அவதி

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு ஏதும் காரணங்களோ, தகவல்களோ தெரிவிக்கப்படவில்லை என்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, லண்டன் செல்ல முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். 

ANI ஊடகத்திடம் பேசிய பயணி ஒருவர், "நான் லண்டனுக்குப் பயணிக்க இருந்தேன். ஆனால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்த எந்த காரணத்தையோ அல்லது வேறு விவரங்களையோ விமான நிறுவனம் தரப்பில் வழங்கவில்லை" என குற்றஞ்சாட்டினார்.

Air Flight 159 Flight Cancelled: இதுவும் 787-8 ட்ரீம்லைனர் விமானமா?

பயணிகள் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன. ஜூன் 12ஆம் தேதி நடந்த விபத்துக்கு பின், அகமதாபாத் நகரில் இருந்து லண்டனுக்கு செல்ல இருந்த முதல் விமான சேவை இதுதான். இதுவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்தாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

அகமதாபாத் - லண்டன் செல்லும் ஏர் இந்தியாவின் ஏஐ 159 விமானம் இன்று (ஜூன் 17) மதியம் 1.10 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதியம் 1.45 மணியளவில் இந்த விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது. ஏர் இந்தியா வலைத்தளத்தின்படி, போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஏஐ 159 ஆக பறக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரை செல்கிறீர்களா ? முக்கிய உத்தரவு.. மக்களே எச்சரிக்கை

மேலும் படிக்க | விமானிகளுக்கும் ஓய்வு வயது உண்டா? இந்த வயதுக்கு மேல் அனுமதி இல்லை!

மேலும் படிக்க | அகமதாபாத் விமான விபத்து: முன்னாள் விமானி கூறும் ஷாக் தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News