)
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்ட விமான, சில நிமிடங்களிலேயே விமத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரை தவிர்த்து மற்ற அனைவரும் உயிரிழந்தனர். விமானம் மோதிய மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் சில உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விபத்துக்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டில், ஏர் இந்தியா போயிங் ரக விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சுட்டிக்காட்டி புகார் அளித்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா போயிங் 787 விமானம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கத்தின்போது, கதவை திறப்பதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து ஏர் இந்தியா விமான ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரை மறுத்த நிர்வாகம், அறிக்கையை மாற்றி எழுதுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அறிக்கையை மாற்றி எழுத ஊழியர்கள் மறுத்ததாகவும். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம் அடுத்த 48 மணி நேரத்தில் பணிநீக்கம் செய்யததாகவும் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏர் இந்தியா விமான முன்னாள் ஊழியர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ