Air India Plane Latest News: ஜூன் 12, அதாவது நேற்று அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க, மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அவரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
விமானம் AI 379 தரையிறங்கியதாகவும், விமான நிலையம் அவசரகால செயல்முறைகளை தொடக்கியுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அவசரகால ப்ரோடோகால் படி, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட தேடலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எந்த வித வெடிகுண்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
AI 379 விமானத்தில் 156 பயணிகள்: வெடிகுண்டு மிரட்டல்
விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர் என்றும் விமானத்தின் உள்ளிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் கழிப்பறை சுவரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் திரும்பியது.
டெல்லிக்கு புறப்பட்ட விமானம்
வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது. ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் Flightradar24 தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்த விவரங்களை AOT வழங்கவில்லை என்போது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மரணத்தை ஏமாற்றி... எரிந்த விமானத்திலிருந்து எழுந்துவந்த நபர் பகிர்ந்த பகீர் தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ