தொகுதிப் பங்கீடு இறுதி செய்தால் மட்டுமே நீதி பயணத்தில் பங்கேற்போம் -அகிலேஷ் யாதவ்
Congress Vs Samajwadi Party: முதலில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யுங்கள். அதன்பிறகு ராகுல் காந்தியின் நீதி பயணத்தில் சமாஜ்வாடி கட்சி பங்கேற்கும் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
Bharat Jodo Nyay Yatra, Akhilesh Yadav: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு முடிவடையும் வரை ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கள்கிழமை) ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை அமேதி வழியாகச் செல்கிறது.
முன்னதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் நாங்கள் கலந்துக் கொள்ளுவோம் என அறிவித்திருந்தார். அதேநேரத்தில் சில நிபந்தனைகளை விதித்து, அதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டால், ராகுல் காந்தி உடன் இணைந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்போம் எனக் கூறியிருந்தார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், இதை ஏற்றுக்கொண்டால் ராகுலின் யாத்திரையில் தான் கலந்துக் கொள்வதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
ஆனால் உத்திர பிரதேச மாநில காங்கிரஸ், எங்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் 2009 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களுக்கு சமமான இடங்களை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் அஜய் ராய் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையே இன்னும் தொகுதி பங்கீடு உறுதி ஆகாத நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இடம் பெற்றுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ