இந்தியாவில் விமானம் மற்றும் பேருந்து பயன்படுத்தும் மக்களை விட ரயிலை நம்பி இருக்கும் மக்களே அதிக அளவில் உள்ளனர். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ரயில் பயணமே செலவு குறைந்ததாகவும், அதே சமயம் வயதானவர்களை அழைத்து செல்வதற்கு ஏற்றதாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஜனவரி 12 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி ஆதார் உடன் இணைக்கப்பட்ட irctc கணக்கு வைத்து இருப்பவர்கள் மட்டுமே டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பிஎம் கிசான் : இ-மித்ரா செயலி அப்டேட்! தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முக்கிய தகவல்

புதிய விதிகள் என்ன?
ரயிலில் பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ள முடியும். காலை 8:00 மணி முதல் இந்த முன்பதிவு தொடங்கும். நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கும் முதல் நாளில், ஐஆர்சிடிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் ஆதார் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மட்டுமே டிக்கெடுகளை முன்பதிவு செய்ய முடியும். ஆதார் சரி பார்க்கப்படாத கணக்குகளில் இருந்து முதல் நாளில் டிக்கெட்களை புக்கிங் செய்ய முடியாது.
ஏன் இந்த மாற்றம்?
ரயில் டிக்கெட்களை புக்கிங் ஆரம்பிக்கும் முதல் நாளே புரோக்கர்கள் மற்றும் ஏஜென்ட்கள் அதிக அளவில் புக் செய்து கொள்கின்றனர். மேலும் சில Bots-களை பயன்படுத்தியும் அதிக அளவில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்கின்றனர். இதனால் தேவைப்படும் மக்களுக்கு சரியான நேரத்தில் டிக்கெட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதனை சரி செய்யவே இந்திய ரயில்வே இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. முன்பு ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் மூலம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே புக்கிங் செய்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் இதனை தற்போது தளர்த்தி உள்ளனர். ஐஆர்சிடிசி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைந்தவர்கள் மட்டுமே முதல் நாளில் புக்கிங் செய்து கொள்ள முடியும் என்பதால் போலி கணக்குகள் தடுக்கப்படும்.

இந்த புதிய நடைமுறைக்கும் நேரில் கவுண்டரில் சென்று டிக்கெட் வாங்குவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கவுண்டரில் டிக்கெட் வாங்குவது பழைய நடைமுறைபடியே இருக்கும். அதே போல ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் ஒரு மாதத்திற்கு 6 டிக்கெட்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று இருந்த வரம்பு தற்போது 12 டிக்கெட்டுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் தக்கல் டிக்கெட்டின் போதும் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே அனைத்து ரயில் பயணிகளும் உடனடியாக ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்குமாறு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது
ஆதார் - IRCTC இணைப்பது எப்படி?
1. ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்தில் லாக்-இன் செய்யவும்.
2. 'My Account' பகுதிக்கு சென்று 'Link Your Aadhaar' என்பதை தேர்வு செய்யவும்.
3. உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளிடவும்.
4. இணைப்பு முடிந்ததும், நீங்கள் டிக்கெட் புக் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









