Whatsapp Web பயன்படுத்துவோர் கவனத்திற்கு! மத்திய அரசின் புதிய விதிகள்!

வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயனர்களுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Dec 1, 2025, 09:15 PM IST
  • வாட்ஸ்அப் வெப் யூஸ் பண்றீங்களா?
  • இனி 6 மணி நேரத்துக்கு ஒரு முறை லாக்-அவுட் ஆகும்!
  • மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
Whatsapp Web பயன்படுத்துவோர் கவனத்திற்கு! மத்திய அரசின் புதிய விதிகள்!

இனி கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் WhatsApp Web மூலம் தொடர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்ய முடியாது. மத்திய தொலைத்தொடர்பு துறை பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, வாட்ஸ்அப் வெப் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும். இது அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் மல்டி-டிவைஸ் பயனர்களுக்குச் சற்று சிரமத்தை ஏற்படுத்தலாம். சைபர் மோசடிகள் மற்றும் ஆன்லைன் மூலமான குற்றங்களை தடுக்கும் நோக்கில், மத்திய அரசு சில புதிய பாதுகாப்பு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்படி WhatsApp, Telegram, Signal போன்ற அனைத்து செயலி நிறுவனங்களுக்கும் 90 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவாக பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க - வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் கவனத்திற்கு... வருகிறது புதிய சட்டம்!

6 மணி நேர லாக்-அவுட்

  • இதுவரை, நாம் ஒருமுறை க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து வாட்ஸ்அப் வெப்பில் லாகின் செய்துவிட்டால், நாட்கணக்கில் அது அப்படியே இருக்கும். ஆனால், புதிய விதிப்படி வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் செயலியில் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் உங்கள் அக்கவுண்ட் தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும்.
  • மீண்டும் பயன்படுத்த வேண்டுமென்றால், உங்கள் மொபைல் போனை எடுத்து க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து மறுபடியும் லாகின் செய்ய வேண்டும். இது நீண்ட நேரம் கணினியில் வாட்ஸ்அப் திறந்து கிடப்பதால் ஏற்படும் தவறான பயன்பாட்டை தடுக்கும் என்று அரசு கருதுகிறது.

சிம் கார்டு அவசியம்

  • உங்கள் மொபைல் போனில் எந்த சிம் கார்டு உள்ளதோ, அந்த எண்ணில் மட்டுமே வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியும். சிம் கார்டு இல்லாமல் Wi-Fi மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைலில் பழைய வாட்ஸ்அப் கணக்கை இனி பயன்படுத்த முடியாது. 
  • சிம் கார்டு கழற்றப்பட்டாலோ அல்லது செயலிழந்து போனாலோ, அந்த மொபைலில் உள்ள வாட்ஸ்அப் கணக்கு வேலை செய்யாது. இது SIM Binding என்று அழைக்கப்படுகிறது.

ஏன் இந்த மாற்றம்?

இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் மோசடிகளை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி எண்கள் மூலமாகவும், சிம் கார்டு இல்லாமலேயே பல சாதனங்களில் லாகின் செய்து மோசடி செய்வதை தடுக்கவும் இது உதவும் என்று தொலைத்தொடர்பு துறை நம்புகிறது. இந்த மாற்றங்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பயனர்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டாலும், பாதுகாப்பு ரீதியாக இது ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு முன் இந்த விதிகளை அறிந்து கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News