Ration Card Cancellation Update: சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளின் சரிபார்ப்பு நத்தை வேகத்தில் நடந்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிட்ன்ரன்ர். அதாவது சந்தேகத்திற்குரிய சுமார் 161,000 ரேஷன் கார்டுகளை சரிபார்க்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை 70,000 மட்டுமே சரிபார்க்கப்பட்டு உள்ளன. சுமார் 90,000 ரேஷன் கார்டுகள் சரிபார்ப்புக்காக இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு தொடர்ந்து ரேஷன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தாமதம் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது. முறைகேடுகள் வெளிப்படுவதைத் தடுக்க ரேஷன் கார்டுகளின் சரிபார்ப்பு வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
போலி ரேசன் கார்டுகள்:
மத்திய அரசு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சந்தேகத்திற்கிடமான ரேஷன் கார்டுகளின் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் பெயர்கள் அல்லது முகவரிகள் தவறாக இருந்தால் அல்லது ஆதார் எண்கள் மற்றும் பயோமெட்ரிக்ஸ் புதுப்பிக்கப்படாத அட்டைதாரர்கள் அடங்குவர். ராய்கர் மாவட்டத்தில் சுமார் 161,000 ரேசன் அட்டை உறுப்பினர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக பட்டியலிடப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலர் தகுதியற்றவர்கள், மற்றவர்கள் நீண்ட காலமாக ரேஷன் பெறவில்லை. மேலும் பலரின் ஆதார் எண்கள் இன்னும் இணைக்கவில்லை.
போலி ரேசன் கார்டுகள் சரிபார்ப்பு தாமதம்:
இந்த அட்டைகளை சரிபார்க்க மத்திய அரசு உணவுத் துறைக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் மாவட்டத்தில் உள்ள 50 சதவீத அட்டைகள் கூட இன்னும் சரிபார்க்கப்படவில்லை. சரிபார்ப்பு விசாரணை நத்தை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது இது சம்பந்தமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சி குற்றச்சாற்று:
பாஜக ஆட்சிக் காலத்தில் போலி ரேஷன் அட்டைகள் உருவாக்கப்பட்டதாகவும், அவர்களின் பெயர்களில் போலி ரேஷன்கள் ஒதுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக விசாரணை இப்போது வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. அட்டைகள் சரிபார்க்கப்பட்டால், குறிப்பிடத்தக்க முறைகேடுகள் வெளிப்படும் என்பதால் பாஜக தாமதம் செய்வதாக எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர்.
அதிகாரிகள் விளக்கம்:
காங்கிரஸ் கட்சி குற்றச்சாற்றை அடுத்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ரேசன் அட்டை சரிபார்ப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. நெல் கொள்முதல் காரணமாக சரிபார்ப்பு செயல்முறை சற்று தாமதமாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அட்டைகளின் 100% சரிபார்ப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவறானதாகக் கண்டறியப்பட்ட அட்டைகள் விதிகளின்படி நீக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.
முக்கிய அம்சங்கள்:
தாமதம்: மத்திய அரசு உத்தரவிட்டும், இதுவரை 70,000 கார்டுகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளன. சுமார் 90,000 கார்டுகளின் சரிபார்ப்பு ஆமை வேகத்தில் நிலுவையில் உள்ளது.
விநியோகம்: சந்தேகத்திற்குரிய இந்த கார்டுகளுக்கு இப்போதும் ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது.
அரசியல் குற்றச்சாட்டு: வேண்டுமென்றே தாமதம் செய்வதன் மூலம் பாஜக ஆட்சியில் நடந்த போலி ரேஷன் கார்டு முறைகேடுகளை மறைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
அதிகாரிகள் விளக்கம்: நெல் கொள்முதல் காரணமாகச் சரிபார்ப்பில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
சரிபார்ப்பு: விரைவில் 100% சரிபார்ப்பு முடிக்கப்படும் என்றும், தவறாகக் காணப்படும் கார்டுகள் விதிகளின்படி நீக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ரேசன் கார்டுகள் ரத்து: இதன் மூலம், 1.50 லட்சத்திற்கும் அதிகமான கார்டுகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது, அட்டைதாரர்களுக்கு இனி ரேஷன் கிடைக்காது.
குறிப்பு: இந்த ரேசன் அட்டை சரிபார்ப்பில் தவறு என்று கண்டறியப்படும் கார்டுகள் ரத்து செய்யப்படும் போது, அதன் அட்டைதாரர்களுக்கு இனி அரிசியோ, சர்க்கரையோ கிடைக்காது.
மேலும் படிக்க - ரேஷன் கார்டு : திருச்சி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க - ரேஷன் கடைகளில் வந்த முக்கிய மாற்றம்! முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









