இந்த வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் கிடையாது! மாநில அரசு அறிவிப்பு!

பழைய வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல்கள் வழங்கப்படாது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதனால் பழைய வாகனங்களை வைத்திருக்கும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 

Written by - RK Spark | Last Updated : Jul 1, 2025, 12:03 PM IST
  • பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு கட்டுப்பாடு.
  • பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் தரக்கூடாது.
  • மாநில அரசு கடும் எச்சரிக்கை.
இந்த வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் கிடையாது! மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் அதிகப்படியான காற்று மாசு டெல்லியில் தான் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காலாவதியான வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது. காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த புதிய நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல்கள் வழங்கப்பட மாட்டாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த தடை தற்போது அமலுக்கு வந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிங்க: ஜன்னல் சீட் வேணுமா... லோயர் பெர்த் வேணுமா... இனி ரயிலில் பிடிச்ச சீட்டை புக் பண்ணலாம்!

ஏற்கனவே இந்த தடை அமலில் இருந்த போதிலும் விதியை மீறி சில வாகனங்கள் செயல்பட்டன. இந்த தடையை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மறுசுழற்சிக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி பயன்படுத்தி வருகின்றனர். இந்த விதியை கடுமையாகும் வகையில் இன்று முதல் டெல்லி முழுவதும் உள்ள பெட்ரோல் பம்புகளில் காலாவதியான வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல்கள் வழங்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

சிறப்பு கேமராக்கள் மூலம் இந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 350 பெட்ரோல் பங்க் நிலையங்களிலும் இந்த சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பழைய வாகனங்கள் அடையாளம் காணப்படுகின்றன. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு வெளியானது. அரசின் இந்த விதிகளை அனைத்து பெட்ரோல் நிலையங்களும் பின்பற்ற வேண்டும் எனவும், விதியை மீறும் பெட்ரோல் பங்க் நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த தடையை கண்காணிக்க போக்குவரத்து துறை, காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து செயல்பட உள்ளனர்.

டெல்லி அரசு தகவல்

"டெல்லியில் மொத்தம் 350 பெட்ரோல் நிலையங்கள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் 100 நிலையங்களை காவல்துறை பணியாளர்கள் கண்காணிப்பார்கள். அடுத்து 60 நிலையங்களை போக்குவரத்துக் குழுவினர் கண்காணிப்பாளர்கள். அடுத்த 100 நிலையங்களை காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மீதமுள்ள பங்குகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பார்கள்" என்று டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் பெட்ரோல் பங்க் நிலையங்கள் மற்றும் சிஎன்ஜி நிலையங்கள் குறித்து காற்று தரம் மேலாண்மை ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கப்படும், அதனை தொடர்ந்து அவர்களுக்கு அபராதம் அல்லது சீல் வைக்கப்படும்.

மேலும் படிங்க: சொந்த ஊருக்கு ரயிலில் செல்வோர் கவனத்திற்கு! உடனடியாக அமலுக்கு வரும் புதிய விதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News