SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்!

வாடிக்கையாளர்கள் தங்களது ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை ஸ்டேட்மென்ட் கிரெடிட் ஆக, அதாவது பணமாக மாற்றுவதற்கான விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.  

Written by - RK Spark | Last Updated : Mar 3, 2026, 03:25 PM IST
  • வரும் ஏப்ரல் 1 முதல்..
  • SBI கிரெடிட் கார்டு விதிகளில்...
  • அதிரடி மாற்றம்: புதிய லிமிட் என்ன?
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்!

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சில புதிய நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இது தொடர்பான முக்கியமான அறிவிப்பை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்ட் பாயிண்ட்ஸ் நடைமுறையில் தான் புதிய மாற்றங்கள் வர உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை ஸ்டேட்மென்ட் கிரெடிட் ஆக, அதாவது பணமாக மாற்றுவதற்கான விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க - 48 தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஈரான்! டிரம்ப் முக்கிய தகவல்

புதிய ரிவார்ட் பாயிண்ட்ஸ் விதிமுறைகள்!

எஸ்பிஐ கொண்டு வந்துள்ள புதிய விதிகளின்படி ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 60,000 ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை மட்டுமே பணமாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு மேல் ரிவார்ட் பாய்ண்ட்கள் இருந்தாலும் அதனை அடுத்த மாதம் தான் பயன்படுத்த முடியுமே தவிர, அதே மாதத்தில் மாற்ற முடியாது. தற்போது வரை எவ்வளவு ரிவார்ட் பாயிண்ட்ஸ் இருக்கிறதோ அதனை வாடிக்கையாளர்கள் கிரெடிட்ஸ் ஆக  மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. ஏப்ரல் ஒன்றுக்கு பிறகு இந்த ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை 4,000 மடங்குகளில் மட்டுமே மாற்ற முடியும். அதாவது 4000, 8000 என்ற அளவில் தான் இந்த ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை பணமாக மாற்ற முடியும். அதற்கு குறைவாக உள்ள ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை மாற்ற முடியாது. அதேபோல அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 60,000 பாயிண்ட்கள் வரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். 

விதிவிலக்கு உள்ளதா?

எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்து காடுகளுக்கும் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரீமியம் கார்டுகளுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு, போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள், போன்பே எஸ்பிஐ கார்டு செலக்ட் பிளாக் போன்ற கார்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு வரை உங்களிடம் உள்ள ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை பணமாக மாற்றிக் கொள்வது நல்லது. அதற்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகளின் படி தான் நீங்கள் ரிவார்ட் பாய்ண்ட்களை பணமாக மாற்ற முடியும். ஏற்கனவே கேஸ் பேக் மற்றும் விளம்பர சலுகைகளில் மாற்றங்கள் கொண்டு வந்த எஸ்பிஐ தற்போது இந்த ரிவார்ட்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க - ஈரானை சனிக்கிழமை அட்டாக் செய்தது ஏன்...? அமெரிக்கா - இஸ்ரேல் திட்டம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News