அலிநகர் தேர்தல் முடிவு 2025: பீகார் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் பெயர் மைதிலி தாக்கூர்..! யார் இவர்?

Who is this Maithili Thakur?: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும், வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடங்கும். இந்த முறை, பெரும்பாலானோர் தர்பங்காவில் உள்ள அலிநகர் தொகுதி மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 14, 2025, 08:38 AM IST
அலிநகர் தேர்தல் முடிவு 2025: பீகார் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் பெயர் மைதிலி தாக்கூர்..! யார் இவர்?

Alinagar Assembly Election Result 2025: பீகாரின் தர்பங்காவில் உள்ள ஒரு முக்கிய தொகுதியான அலிநகர், கடுமையான தேர்தல் போர்களின் வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தத் தேர்தலில், நாட்டுப்புற பாடகியும் பாஜக கலாச்சார தூதருமான மைதிலி தாக்கூர் (25) தனது அரசியல் பயணத்தை இந்த தொகுதியில் இருந்து தொடங்குகிறார். இதன் காரணமாக பீகார் மக்களின் கவனம் இவர் மீது திரும்பு உள்ளது. யார் இந்த மைதிலி தாக்கூர்? இவர் போட்டியிடும் அலிநகர் தொகுதி குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

அலிநகர் சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை:

2015-க்கு முன்பு வரை அலிநகர் தொகுதி ஆர்ஜேடி-யின் கோட்டையாக இருந்து வந்தது.  ஓய்வு பெரும் வரை இந்த தொகுதியில் தொடர்ந்து ஏழு முறை வெற்றிகளை நீண்ட காலமாக எம்எல்ஏ-வாக இருந்தவர் அப்துல் பாரி சித்திக். ஆனால் அலிநகர் தொகுதி, 2020 சட்டசபை தேர்தலில் ஒரு மாற்றத்தைக் கண்டது. முன்னாள் ஆர்ஜேடி பிரமுகரான விகாஷீல் இன்சான் கட்சியின் மிஷ்ரி லால் யாதவ் NDA-வில் இணைந்தார். அவர் சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தமுறை 2020 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆர்ஜேடியின் பினோத் மிஸ்ரா மற்றும் ஜான் சூராஜ் கட்சியின் பிப்லாவ் சவுத்ரி ஆகியோருடன் மைதிலி தாக்கூர் நேரடிப் போட்டியை எதிர்கொள்கிறார்.

பாஜக முதன்முறையாக அரசியலில் நுழையும் பிரபல நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூரை களமிறக்கியிருப்பதாலும், ஆர்ஜேடி மூத்த தலைவர் வினோத் மிஸ்ராவை களமிறக்கியிருப்பதாலும் போட்டி பரபரப்பாக மாறியுள்ளது. இந்த தொகுதி மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்டத்தில் அலிநகர் தொகுதிக்கான வாக்குப்பதிவு முடிந்தது.

மைதிலி தாக்கூர் பின்புலம்

மைதிலி தாக்கூர் அரசியலுக்கு ஒரு புதியவர். ஆனால் மிதிலாவில் அவரது புகழ் மிகவும் வலுவானதாகக் கருதப்படுகிறது. அவரை தேர்தலில் போட்டியிட வைப்பதன் மூலம் பாஜகவின் முக்கிய வியூகமாக கருதப்படுகிறது. இந்த இளம் மற்றும் கலாச்சார பிரமுகர் மூலம் புதிய அரசியல் சக்தியைப் பயன்படுத்த முயற்சிக்கிறது.

வினோத் மிஸ்ரா பின்புலம்

ஆர்ஜேடியின் வினோத் மிஸ்ரா தனது வலுவான இருப்பு மற்றும் அப்பகுதியில் நீண்டகால பயணத்தை நம்பியுள்ளார். மகா கூட்டணியின் வாக்கு பரிமாற்றம், உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் பாரம்பரிய சமன்பாடுகள் அவருக்கு வலுவான அடித்தளத்தை வழங்குவதாகத் தெரிகிறது.

வெற்றி நம்பிக்கையை வெளிப்படுத்திய மைதிலி தாக்கூர்:

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்திற்கு முன்பு, பிரபல நாட்டுப்புற பாடகியும் பாஜக வேட்பாளருமான மைதிலி தாக்கூர், தொகுதி முழுவதும் வாக்காளர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த ஆதரவை மேற்கோள்காட்டி நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், நான் எனது தொகுதியில் கடினமாக உழைத்து வருகிறேன். அதன் முடிவு நாளை மக்களின் முகங்களில் தெரியும். இங்குள்ள மக்களிடமிருந்து எனக்கு ஏராளமான ஆசீர்வாதம் கிடைத்துள்ளன. வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட ஒன்றைக் கண்டேன். நான் எங்கு சென்றாலும், என்னை இருகரம் நீட்டி வரவேற்று ஆசி பெற்றேன். நான் சந்தித்த பெண்கள், கடந்த 20 ஆண்டுகளில் பீகாரில் NDA ஆட்சிக் காலத்தில் தாங்கள் பெற்ற உதவி மற்றும் கண்ட மாற்றங்கள் பற்றிப் பேசியுள்ளனர். அவர்கள் பிரதமர் மோடியையும் முதல்வர் நிதிஷ் குமாரையும் விரும்புகிறார்கள்" என்று தாக்கூர் கூறியிருந்தார்.

அலிநகர் தொகுதியில் யாருக்கு வெற்றி?

கல்வி, வேலையின்மை, சாலைகள் மற்றும் வெள்ள நிவாரணம் போன்ற பிரச்சினைகளும் தேர்தல் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தின. பொதுமக்கள் கலாச்சார அடையாளத்துடன் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பார்களா அல்லது பாரம்பரிய அரசியல் அனுபவத்தை நம்பியிருப்பார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க - Bihar Election Result 2025 LIVE: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை - பீகாரில் ஆட்சிக் கட்டிலில் ஏறப்போவது யார்?

மேலும் படிக்க - பீகார் தேர்தல் முடிவுகள் 2025: இன்று ஒரு தீர்க்கமான நாள்! வாக்கு எண்ணிக்கை எத்தனை மணிக்கு?

மேலும் படிக்க - பீகார் மக்களின் ஆணை என்ன?.. 46 வாக்குச்சாவடிகளில் 243 சட்டசபை இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News