மே 22 முதல் Waiting List ஆரம்பம்.. அனைத்து ரயில்கள் இயக்கப்படும்
அனைத்து வகையிலான ரயில்களின் சேவைகளை தொடங்குவதற்குகான வாய்ப்பு இருப்பதாக இந்தியன் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மே 22 ஆம் தேதி முதல் பயணம் செய்வதற்கு மே 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
புது டெல்லி: அனைத்து வகையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சேர் கார் (AC Chair Car) சேவையைத் தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று இந்தியன் ரயில்வே (Indian Railway) வாரியம் புதன்கிழமை அறிவித்துள்ளது. அதாவது தற்போது இயக்கப்படும் தனது சிறப்பு ரயில்கள் மட்டுமல்லாமல், வரவிருக்கும் நாட்களில் ரயில்வேயின் அனைத்து ரயில்களிலும் பயணிப்பதற்காக காத்திருப்புப் பட்டியலை மே 22 முதல் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், இந்த ரயில்களில் காத்திருப்பு பட்டியலை (Waiting List) மூன்றாம் ஏசி வகுப்பில் 100, இரண்டாம் ஏசி வகுப்பில் 50, ஸ்லீப்பர் வகுப்பிற்கு 200, நாற்காலி ஏசி காருக்கு 100, முதல் ஏசி மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு 20-20 என ரயில்வே நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுக்கான பிரச்சனையை குறைக்க ரயில்வே முயற்சித்துள்ளது. இந்த மாற்றம் மே 22 ஆம் தேதி முதல் பயணம் செய்வதற்கு மே 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த வாரிய உத்தரவில், பெரிய நகரங்களுக்கும் சிறிய நகரங்களுக்கும் சேவைகளைத் தொடங்கலாம் என்பதும் இதன் பொருள்.
ரயில்வே அமைச்சகம் புதன்கிழமை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்பு பயணிகள் ரயில்களுக்கான உத்தரவை மாற்றி, பயணிகளின் காத்திருப்பு பட்டியலை அனுமதித்தது. இருப்பினும், சிறப்பு ரயில்களில் எந்த RAC வசதியும் இருக்காது. ரயில்களின் காத்திருப்பு பட்டியல் மே 22 முதல் பொருந்தும், இதற்கான முன்பதிவு மே 15 முதல் தொடங்கும்.