பகல்காம் தாக்குதல்: அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் - சூளுரைக்கும் அமித் ஷா!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை கூட விடப்போவதில்லை. அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : May 1, 2025, 09:23 PM IST
பகல்காம் தாக்குதல்: அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் - சூளுரைக்கும் அமித் ஷா!

காஷ்மீர் மாநிலம் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக பொறுப்பேற்றது. இந்த தாக்குதலால் ஆதிரமடைந்த இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைசச்ர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், அமைச்சர் அமித் ஷா பொதுவெளியில் பேசுவது இதுவே முதல்முறையாகும். அசாம் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக பேசி உள்ளார். 

அவர் பேசியதாவது, இந்தக் கோழைத்தனமான தாக்குதல் அவர்களின் வெற்றி என்று யாராவது நினைத்தால்.. இது மோடியின் இந்தியா என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதற்குக் காரணமான அனைவரும் ஒவ்வொருவராகத் தண்டிக்கப்படுவார்கள். அனைவரையும் நிச்சயம் தேடிப் பிடித்து வேட்டையாடுவோம். நாட்டில் எந்தவொரு மூலையில் இருந்தாலும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்ற வேண்டும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதுவே எங்களின் உறுதிப்பாடு.

எந்தவொரு பகுதியில் இருந்தாலும் பயங்கரவாதத்தை முழுமையாக அகற்றுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்குச் சர்வதேச அளவில் ஆதரவு இருக்கிறது. இப்போராட்டத்தில் 140 கோடி இந்தியர்களுடன் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இப்போராட்டத்தில் உலக நாடுகள் இந்திய மக்களுடன் நிற்கிறது.

பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை, நமது போராட்டம் தொடரும். பயங்கரவாத செயல்களைச் செய்தோருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்பதை நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். தீவிரவாதத்தை எந்தவொரு வடிவிலும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது.. இன்று அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது மக்களைக் கொன்று அதன் மூலம் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கக்கூடாது. பயங்கரவாதத்தைப் பரப்பும் அனைவருக்கும் நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.. இது போரின் முடிவு அல்ல; ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதில் வழங்கப்படும்" என்றார்.

மேலும் படிங்க: இந்தியா vs பாகிஸ்தான்: அணு ஆயுதத்தில் எந்த நாடு வலிமை.. ஓர் பார்வை!

மேலும் படிங்க: பகல்காம் மட்டுமில்லை... காஷ்மீரில் 3 இடங்களை நோட்டமிட்ட தீவிரவாதிகள் - ஷாக் தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News