Indian Railways Latest News: 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ரயில் பயண கட்டண சலுகை குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதைப்பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
ரயில் பயணத்தில் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50% கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40% கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. இந்த கட்டண சலுகை கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த ரயில் சலுகை மூத்த குடிமக்களுக்கு பேருதவியாக இருந்தது.
ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை படிப்படியாக தொடங்கிய போது, ரயில்வே செலவை கட்டுப்படுத்தும் நோக்கில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலகை ரத்து செய்யப்பட்டது.
மூத்த குடிமக்கள் ரயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால், 2020 ஆம் ஆண்டு முதல் ரயிலில் பயணம் செய்வதை மூத்த குடிமக்கள் படிப்படியாக தவிர்க்க தொடங்கினர்.
ஆன்மீக தளங்களுக்கு செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு சென்று வரவும் மூத்த குடிமக்களுக்கு இந்த மூத்த குடிமக்கள் ரயில் கட்டண சலுகை பேருதவியாக இருப்பதால், அதை மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் ரயில்வே அமைச்சகம், இந்த மூத்த குடிமக்கள் சலுகை காரணமாக ஆண்டுக்கு ரூபாய் 1667 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாது என்று இந்தியன் ரயில்வே திட்டவட்டமாக அறிவித்தது.
ஆனாலும் கொரோனா காலத்துக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் மூத்த குடிமக்கள் நல்ல சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்ட தொடரில் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேல் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இனிமேலும் தாமதிக்காமல் விரைவாக ரயில் பயண கட்டண சலுகை மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க - ரயில் டிக்கெட் புக் செய்யாமல் ஸ்லீப்பர் கோச்சில் சீட் பெறுவது எப்படி?
மேலும் படிக்க - ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா? அதுவும் 75 சதவீதம் வரை தள்ளுபடி
மேலும் படிக்க - குவியும் கோடிகள்... அதிக வருமானம் ஈட்டும் டாப் 5 ரயில் நிலையங்கள் - நம்பர் 1 எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









