பேஸ்புக் உதவியால் 12 வருடங்களுக்கு பின் ஆந்திர பிரதேசத்தில் குடும்பத்துடன் சிறுமி ஒருவர் இணைத்துளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் சீப்புருபள்ளி நகரை சேர்ந்த பவானி என்ற சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது 4வது வயதில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து காணாமல் போய்விட்டார்.


இந்நிலையில் அந்த சிறுமியை விஜயவாடாவில் உள்ள ஜெயா என்ற பெண் தத்தெடுத்து வளர்த்துள்ளார். மேலும் வம்சி கிருஷ்ணா என்பவரிடம் வீட்டு வேலைக்காக பவானி சென்றுள்ளார். அங்கு வம்சி அவரிடம் தனது பெற்றோரிடம் இருந்து காணாமல் போனபின் தன்னை ஒரு பெண் எடுத்து வளர்த்து வருகிறார் என்று கூறினார். 


பவானியிடம், உன்னுடைய உண்மையான பெற்றோரிடம் சேர உனக்கு விருப்பம் உண்டா? என கேட்டேன்.  அவள் ஆம் என்றாள். இதன்பின்பு பவானியிடம் விவரங்கள் பெற்று வம்சி பேஸ்புக்கில் தேடியுள்ளார். அதில், பவானி அளித்த தகவலுடன் ஒத்து போயின. அந்த நபர் வீடியோ காலில் வரும்படி கேட்டு கொண்டார் வம்சி. பின்னர் அவரது குடும்பத்தினரும் சிறுமி தங்கள் குடும்ப உறுப்பினர் என உறுதி செய்தனர். இதனால் தற்போது தனது குடும்பத்துடன் இணையும் மகிழ்ச்சியில் பவானி உள்ளார்.