)
Tiffin Box Beat 6th Student Skull Fracture : ஆந்திராவில், 6ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒருவருக்கு ஆசிரியரால் ஏற்பட்டுள்ள காயம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
குழந்தையை அடித்த ஆசிரியை!
ஆந்திராவில் உள்ள, சித்தூர்-புங்கானூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு, சாத்விகா நாகஸ்ரீ என்கிற குழந்தை, 6ஆம் வகுப்பில் படித்து வந்துள்ளார். இவரை, அவரது இந்தி ஆசிரியர் சலீமா பாஷா தனது பள்ளி பையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், ஒரு இரும்பு டிஃபன் பாக்ஸ் இருந்துள்ளது. இதில் அந்த குழந்தைக்கு அடிப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இதில், அந்த 6ஆம் வகுப்பு மாணவி பள்ளி வகுப்பில் சேட்டை செய்ததாக தெரிகிறது. இதனால்தான், அந்த இந்தி சொல்லித்தரும் ஆசிரியை அவரை டிஃபன் பாக்ஸால் அடித்ததாக தெரிய வந்துள்ளது.
ஆபத்தை உணராத பெற்றோர்:
அடிப்பட்ட குழந்தை சாத்விகா நாகஸ்ரீயின் தாயும், அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக இருந்திருக்கிறார். குழந்தையின் தலையில் அடிப்பட்டதை பார்த்திருக்கும் இவர், அதை ஆரம்பத்தில் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.
பின்பு, குழந்தைக்கு அதிகப்படியான தலைவலியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. அவரை, பெங்களூருவில் இருக்கும் பல்வேறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, குழந்தைக்கு CT ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இதில்தான், குழந்தைக்கு மண்டை ஓட்டில் எலும்பு முறிவு (fracture) ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
புகார்:
குழந்தைக்கு இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டுள்ளது அவரது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர், தங்கள் குழந்தையை அடித்த ஆசிரியை மீது புகார் கொடுத்திருக்கின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பூங்காணூர் போலீஸார் இது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இதே போல, இன்னொன்று..
மேற்கூறியது போலவே, இன்னொரு சம்பவமும் அதே ஆந்திராவில் நடந்துள்ளது. இதில், 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரின் கையை ஆசிரியை உடைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின் படி, சம்பந்தப்பட்ட ஆசிரியை இரும்பு டேபிளை வைத்து அந்த மாணவரின் கையை உடைத்ததாகவும், இதனால் அந்த மாணவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்களும், அந்த மாணவரின் கை, மூன்று இடங்களில் உடைந்திருப்பதை கண்டுபிடித்தனர். இறுதியில், அவர்கள் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் மோகன் என்பவர் இதை செய்தது தெரிய வந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ