UPI Service Mobile Numbers: இப்போதெல்லாம் பலரும் கையில் பணத்தை பார்த்தே பல காலம் ஆகியிருக்கும் எனலாம். அந்தளவிற்கு கூகுள் பே, போன் பே போன்ற UPI செயலிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
UPI: ஏப்ரல் 1ஆம் தேதி மாற்றம்
காய்கறி கடை, பலசரக்கு கடை தொடங்கி ஜவுளிக் கடை, நகைக்கடைகள் வரை நீங்கள் UPI செயலிகள் மூலமே பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடிகிறது. உங்கள் கிரெடிட் கார்டையும் UPI செயலி மூலம் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அந்த வகையில், வரும் ஏப். 1ஆம் தேதியில் இருந்து சில மொபைல் நம்பர்கள் மூலம் UPI சேவையை பயன்படுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPI: இந்த நம்பர்கள் வேலை செய்யாது
அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயலற்ற மொபைல் நம்பர்கள் அல்லது மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொபைல் நம்பர்கள் ஆகியவற்றில் UPI சேவைகள் இனி வேலை செய்யாது என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரயில் விதிகளில் மிகப்பெரிய மாற்றம்! பெண்களுக்கு கேட்காமலே சீட் கிடைக்கும்
UPI: எதனால் இந்த நடவடிக்கை?
மோசடி, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுக்கவே இத்தகைய எண்களின் கணக்குகளை துண்டிக்குமாறு வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்களுக்கு (PSPs) அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க, தங்கள் UPI சேவையில் பதிவு செய்த மொபைல் எண்கள் செயலில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
UPI உடன் இணைக்கப்பட்ட செயலற்ற மொபைல் நம்பர்கள் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். பயனர்கள் தங்கள் எண்களை மாறினாலோ அல்லது செயலிழக்கச் செய்தாலோ அவர்களின் UPI கணக்குகள் பெரும்பாலும் அப்படியே செயலிலேயே இருக்கும்.
UPI: வங்கிகள் நம்பர்களை நீக்கும்
இதனால் அவர்களின் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. மோசடி செய்பவர்கள் இதை பயன்படுத்தி அந்த கணக்குகளில் நிதி பரிவர்த்தனைகளுக்கான அணுகலைப் பெற வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே, வங்கிகள் மற்றும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றவை இப்போது UPI அமைப்பில் இருந்து செயலற்ற எண்களை நீக்கும் நடவடிக்கைகளில் இறங்க உள்ளன.
UPI: பயனர்கள் கவனத்திற்கு...
ஒருவேளை அப்படி நீக்குவதற்கு முன்னர், பயனருக்கு வங்கி அல்லது PSPs மூலம் நோட்டிபிக்கேஷன் அனுப்புவார்கள். எச்சரிக்கப்பட்டும் மொபைல் நம்பர் செயலாக்கம் பெறாவிட்டால், அதன் UPI சேவையை நீக்கிவிடுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் மொபைல் நம்பரை அப்டேட் செய்வதன் மூலம் மீண்டும் அந்த UPI அணுகலை பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மொபைல் நம்பரை மாற்றிவிட்டு அதனை வங்கியில் அப்டேட் செய்யாமல் இருப்பவர்கள்; அழைப்புகள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட பயன்பாடுகளை நீண்ட நாள்களாக பயன்படுத்தாதவர்கள்; மொபைல் நம்பரை சரண்டர் செய்துவிட்டு அதனை வங்கியில் அப்டேட் செய்யாமல் இருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, நம்பரை திருப்பிக்கொடுத்த பின்னர் அதே நம்பர் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டாலும் சிக்கலையே ஏற்படுத்தும், எனவே அதனை வங்கியில் தெரிவிக்க வேண்டும்.
UPI: மொபைல் நம்பர் முக்கியம்
UPI சேவைக்கு மொபைல் நம்பர் மிக முக்கியம் என்பதால் அந்த மொபைல் எண் செயல்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் மொபைல் நம்பருக்கு வங்கியின் ஓடிபி, வங்கியின் எஸ்எம்எஸ், அழைப்புகள் ஆகியவை வருகிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க | வருடத்தின் முதல் சூரிய கிரகணம்.. எப்போது வருகிறது, இந்தியாவில் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









