ஐ.நா., அறிக்கை எந்தவிதத்திலும் உண்மை இல்லை -இந்திய ராணுவ தளபதி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கைக்கு இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jun 27, 2018, 02:39 PM IST
ஐ.நா., அறிக்கை எந்தவிதத்திலும் உண்மை இல்லை -இந்திய ராணுவ தளபதி
Pic Courtesy : ANI

கடந்த 14 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், எனவே இதுகுறித்து சர்வதேச விசாரணை அவசியம் என கூறப்பட்டுள்ளது

இதுதொடர்பாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அனைவருக்கும் தெரியும், இந்தியா இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டிருப்பது எந்தவிதத்திலும் உண்மை இல்லை. அந்த அறிக்கை உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு உள்ளது, அதுக்குறித்து கவலைப்பட தேவையில்லை எனக் கூறினார். 

 

 

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலமானது இந்தியாவின் ஒரு பகுதியாகும். இந்திய அரசின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. பாகிஸ்தானை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விட்டு வெளியேறுமாறு பலமுறையும் நாம் கேட்டுள்ளோம். இந்திய பிராந்தியத்தை குறித்து தவறாக  அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பையும் மீறுவதாக உள்ளது.  அதை ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்திய தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.