)
Ahmedabad plane crash deaths: குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு இன்று (ஜூன் 12) பிற்பகல் விமான ஒன்று புறப்பட்டது. ஆனால் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்துள்ளனர். இவர்களின் கதி என்ன என்று தெரியாத நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதுவரை 130க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர்.
மீட்கப்பட்ட உடல்கள் கருகிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விமானத்தில் 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், 169 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுகீசிய நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கனடா நாட்டை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன் காட்விக் நகரத்திற்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விமானம் AI171 பிற்பகல் 1.37 மணிக்கு டேக் ஆஃப் ஆகி உள்ளது. இந்த விமானம் அகமதாபாத்தின் விமான நிலையத்தின் ரன்வே 23ல் இருந்து புறப்பட்டுள்ளது. இதையடுத்து 825 அடி உயரத்தில் பறந்த நிலையில், இந்த கோர விபத்து அரங்கேறி உள்ளது. மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியின் விடுதியில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது விபத்து
மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில், மருத்துவ கல்லூரி மாணவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென இந்த விபத்து நடந்துள்ளது. சாப்பிட்டுக்கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலர் விபத்தில் சிக்கிய நிலையில், 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் ஆகியோரை அகமதாபாத்திற்கு உடனடியாக சென்று உதவிகளை செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
133 பேர் பலி
இந்த விபத்தில் விமானிகள் 2 பேர், ஊழியர்கள் 10 பேர் மற்றும் பயணிகள் 230 பேர் என மொத்தமாக 242 பேர் விபத்தில் சிக்கிய நிலையில், சுமார் 133 பேர் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விமானத்தில் கைகுழந்தைகளும் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ