மார்ச் 1ம் தேதி தொடங்கவுள்ள உண்ணாவிரதம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும், முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது. துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகளில் மத்திய பாஜக அரசின் தலையீடு இருக்கிறது என்று முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 


அந்தவகையில் தான், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1ம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த பிப்ரவரி 23ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில் மார்ச் 1ம் தேதி தொடங்கவுள்ள உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியா, பாகிஸ்தானின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதம் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் நடவடிக்கைக்கு என்றும் துணை நிற்போம் என பதிவிட்டுள்ளார்.