புதுடில்லி: டெல்லி காவல்துறையின் மோசமான சம்பவம் ஒன்று மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது உதவி சப் இன்ஸ்பெக்டர் (ASI), உணவக மேலாளரை மோசமாக அடித்து தாக்கி உள்ளார். ஏ.எஸ்.ஐ. அதிகாரிக்கு இலவசமாக உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைத்த அவர், உணவக மேலாளரை தாக்கி உள்ளார். இந்த விவகாரம் மூத்த போலீஸ் அதிகாரியான டி.சி.பி-யிடம் சென்றதை அடுத்து, உதவி சப் இன்ஸ்பெக்டரரை (ASI) சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளார். மேலும் IAS மீது துறை ரீதியான விசாரணையை அமைத்துள்ளார்.
டெல்லி ரயில்வேயின் டி.சி.பி ஹரேந்திர குமார் சிங் (DCP Harendra Kumar Singh) நேற்று (வியாழக்கிழமை) மாலை, நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் (Nizamuddin Railway Station) உள்ள கம்ஸம் உணவகத்தின் மூத்த மேலாளர் சிவம் தக்ரலுக்கு போன் செய்து உணவு கொண்டு அனுப்ப சொல்லியுள்ளார். ஆனால் மேலாளர் உணவு அனுப்பி வைப்பதில் சிறுது தாமதம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகு ஏ.எஸ்.ஐ, மேலாளருக்கு போன் செய்து காவல் நிலையத்திற்கு வரும்படி அழைத்துள்ளார். மேலாளர் காவல் நிலையத்தை அடைந்ததும், அவரை உதவி சப் இன்ஸ்பெக்டர் சரமாரியாக தாக்கி உள்ளார்.
அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர், இந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், நிஜாமுதீன் ஜிஆர்பி காவல் நிலைய எஸ்.எச்.ஓவிடம் இருந்து உணவு ஆர்டர் செய்ய அழைப்பு வந்ததது. சிறிது நேரத்திற்கு பிறகு நான் உணவை அனுப்பி வைத்தேன். ஆனால் அதன் பிறகு என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து உணவு அனுப்ப இவ்வளவு நேரம் ஆகுமா எனக் கூறிக்கொண்டு ஏ.எஸ்.ஐ முகேஷ் மீனா என்னை முதலில் அறைந்தார். அதன் பிறகு மோசமாக அடித்து என் அந்தரங்க பகுதியிலும் உதைத்தார் என வீடியோவில் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் வீடியோ மூலம் முழு சம்பவத்தையும் விளக்கி உள்ளார். அதே நேரத்தில், இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வழக்கில், ரயில்வே டி.சி.பி ஏ.எஸ்.ஐ. முகேஷ் மீனாவை ஆரம்ப விசாரணையில் இடைநீக்கம் செய்து வழக்கை போலிசார் விசாரித்து வருகின்றனர்.