)
சொத்து விற்பனையின் போது செய்யப்படும் சிறிய தவறால் வீட்டு உரிமையாளர் கிட்டத்தட்ட ரூ.1.87 லட்சத்தை கூடுதல் வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். இதே போன்ற தவறுகளால் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான சொத்து விற்பனையாளர்கள் தங்களுக்கு தெரியாமலேயே பணத்தை இழந்து கொண்டிருக்கலாம் என ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர். சமீபத்தில், ஒரு வீட்டு உரிமையாளர் தனது சொத்தை ரூ.1.2 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த சொத்தை அவர் ரூ.80 லட்சத்திற்கு வாங்கியிருந்தார். மூலதன ஆதாய வரியை (Capital Gains Tax) கணக்கிடும்போது, அவர் விற்பனை விலையில் இருந்து வாங்கிய விலையை மட்டும் கழித்து, கிடைத்த லாபத்திற்கு வரி செலுத்தத் தயாரானார். ஆனால், வருமான வரி சட்டத்தின்படி, மூலதன ஆதாயத்தை குறைக்கும் பல சட்டப்பூர்வமான செலவுகளை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறினார். இந்த தவறு சரிசெய்யப்படாமல் இருந்திருந்தால், அவர் கிட்டத்தட்ட ரூ.1.87 லட்சத்தை கூடுதலாக வரியாக செலுத்தியிருப்பார்.
விற்பனையாளர்கள் செய்யும் பொதுவான தவறு
வருமான வரி சட்டம், பிரிவு 55-இன் படி, ஒரு சொத்தை விற்கும் போது கிடைக்கும் லாபத்தை கணக்கிடும்போது, சில குறிப்பிட்ட செலவுகளை அதன் வாங்கிய விலையுடனோ அல்லது மேம்படுத்தலுக்கான செலவுடனோ சேர்த்து, வரிக்குட்பட்ட லாபத்தை குறைத்து கொள்ளலாம். பல விற்பனையாளர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்த தவறுவதே அவர்கள் அதிக வரி செலுத்த முக்கியக் காரணம்.
வரி விலக்கு கோரக்கூடிய முக்கிய செலவுகள்
நிபுணரின் எச்சரிக்கை
வரி ஆலோசகரான சுஜித் பங்கர் கூறுகையில், "இந்த சம்பவத்தில், பதிவு கட்டணமாக செலுத்திய ரூ.4.7 லட்சம், புதுப்பித்தலுக்காக செலவிட்ட ரூ.6 லட்சம், மற்றும் வீட்டுக் கடன் வட்டியான ரூ.3 லட்சம் போன்றவற்றை அந்த உரிமையாளர் கணக்கில் சேர்க்க தவறிவிட்டார்" என்று குறிப்பிடுகிறார். மேலும், "வருமான வரித்துறை தற்போது செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, சந்தேகத்திற்கிடமான அல்லது போலியான செலவு கணக்குகளை கண்டறிகிறது. எனவே, போலியான அல்லது பின்தேதியிட்ட ரசீதுகளை சமர்ப்பிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து செலவுகளுக்கும் முறையான ரசீதுகள் மற்றும் அதற்கான கட்டண ஆதாரங்களை வைத்திருப்பது அவசியம்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சொத்து விற்பனையின் போது, இந்த செலவுகளைச் சரியாகக் கணக்கிட்டு, அதற்கான ஆதாரங்களை முறையாக பராமரிப்பதன் மூலம், விற்பனையாளர்கள் சட்டப்பூர்வமாக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வரிப்பணத்தில் சேமிக்க முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ