)
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த தீபாவளி 2025 பண்டிகை காலத்தை முன்னிட்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கூட்ட நெரிசலை திறம்பட நிர்வகிப்பதற்கும் இந்திய ரயில்வே பல புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஒரு முக்கிய அங்கமாக ரயில்களில் பயணம் செய்யும் போது பயணிகள் எடுத்து செல்லக் கூடாத ஆறு ஆபத்தான பொருட்கள் குறித்த எச்சரிக்கையை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில், விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இந்திய ரயில்வே நிர்வாகம் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புது டெல்லி, பாந்த்ரா டெர்மினஸ், உத்னா மற்றும் சூரத் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில், பயணிகளின் கூட்ட நெரிசலை சீராக நிர்வகிக்க, நிரந்தர காத்திருப்புப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது பயணிகள் ரயில் நிலையத்திற்குள் சீராகவும், பாதுகாப்பாகவும் செல்ல உதவும். ரயில்வே பாதுகாப்புப் படை, விபத்துகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில், விரிவான பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.
பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பின்வரும் ஆறு பொருட்களை ரயில்களில் எடுத்து செல்லக் கூடாது என்று ரயில்வே அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. "பட்டாசுகள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானது மற்றும் கடுமையான விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும்," என்று ரயில்வே அமைச்சகம் தனது பதிவில் எச்சரித்துள்ளது.
1. பட்டாசுகள்: எளிதில் தீப்பற்றக்கூடிய வெடிமருந்துகளை கொண்டிருப்பதால், பட்டாசுகளை எடுத்து செல்வது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
2. காஸ் சிலிண்டர்: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அதிக அழுத்தம் கொண்டவை மற்றும் எளிதில் வெடிக்கக்கூடியவை.
3. Acid: ஆபத்தான மற்றும் அரிக்கும் தன்மை கொண்ட ரசாயனங்கள் பயணிகளுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
4. பெட்ரோல், மண்ணெண்ணெய்: இவை எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள் என்பதால், சிறிய தீப்பொறி கூட பெரிய விபத்தை ஏற்படுத்தலாம்.
5. தீப்பெட்டிகள்: எளிதில் தீப்பற்றக்கூடியவை. (பாதுகாப்பான தீப்பெட்டிகள் சிறிய அளவில் அனுமதிக்கப்படலாம், ஆனால் பெரிய அளவில் எடுத்து செல்வது ஆபத்தானது).
6. அடுப்பு: பயணத்தின் போது சமைப்பதற்காக அடுப்புகளை எடுத்து செல்வது தீ விபத்துக்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்லும் பயணிகள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது அபராதம் விதிப்பது முதல் சிறைத் தண்டனை வரை செல்லக்கூடும். ரயில் பயணம் என்பது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகும். பண்டிகைக் காலங்களில், நமது மகிழ்ச்சியான பயணம் பாதுகாப்பானதாக அமைய, ரயில்வே நிர்வாகத்தின் இந்த எளிய ஆனால் மிக முக்கியமான விதிகளை பின்பற்றுவது ஒவ்வொரு பயணியின் கடமையாகும். இந்த விதிகளைப் பின்பற்றி, நமக்கும், சக பயணிகளுக்கும் ஒரு பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்குவோம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ