Viral News: மும்பையை சேர்ந்த ஆட்டோர் ஓட்டுநர் ஒருவர் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறார். அதாவது, ஆட்டோ ஓட்டுநரான இவர் மாதத்திற்கு 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார் என்ற செய்தியுடன் ட்ரெண்டாகி வருகிறார். இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானதன் விளைவாக அவரது வருமானத்திற்கே பிரச்சனை வந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் ரகுல் ரூபானி சமீபத்தில் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்றுள்ளார். அங்கே அவரது பை மற்றும் பொருட்களை வைக்க அனுமதி இல்லை என்றும் பாதுகாக்க லாக்கரும் இல்லை என்றும் கூறி உள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உங்கள் பை மற்றும் பொருட்களை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை முடித்துவிட்டு வாருங்கள். மேலும், பையை பாதுகாத்து ஒப்படைக்க ரூ. 1000 கட்டணம் என கூறி உள்ளார்.
இப்படி அமெரிக்க தூதரகத்தின் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டாமல், வருபவர்களின் பைகளை பாதுகாத்து சம்பாதித்து வந்துள்ளார். மாதத்திற்கு 5 முதல் 8 லட்சம் வரை வருமானம் ஈட்டி வந்துள்ளார். இதனை ரகுல் ரூபானி தனது லிங்குடின் பக்கத்தில் ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படத்துடன் பகிர, அதன் பின்னர் வேகமாக சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி உள்ளார். இவரது புத்திசாலித்தனத்தை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.
சோசியல் மீடியாவால் வந்த வினை
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தால் வந்த புகழ் இவரது தொழிலுக்கே வேட்டு வைத்துள்ளது. எந்த ஒரு அனுமதியும் இன்று எப்படி அமெரிக்க தூதரகத்தின் வாசலில் உடைமைகளை பாதுகாக்கும் தொழிலில் ஈடுபடலாம் என அவர் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.
அதேபோல் ஆட்டோ ஓட்டுநர் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை காவல்துறையினர் சமன் அனுப்பி உள்ளனர். அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த ஒரு வாகனக்களையும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பயணிகளை வந்து விட்டுவிட்டு திரும்ப அழைத்து செல்லவே ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதியை மீறி ஆட்டோ ஓட்டுநர் இந்த வேலையை செய்து வந்திருக்கிறார் என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் படிங்க: NEET UG 2025: நீட் தேர்வு முடிவுகள்.. எங்கே? எப்படி? வெளியானது முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ