Bangalore Couple Harassment Case: பெங்களூருவில் பூங்கா ஒன்றின் வெளியே காதல் ஜோடியை, ஐந்து ஆண்கள் இணைந்து துன்புறுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். பூங்காவின் வெளியே அந்த ஜோடி ஸ்கூட்டரில் ஒருவரை பார்த்து ஒருவர் அமர்ந்திருந்தது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
காதல் ஜோடியை மிரட்டிய கும்பல்
அந்த வீடியோவின்படி, ஆண் ஒருவர் ஆரஞ்சு நிற டி-சார்ட் அணிந்திருக்கிறார், பெண் ஒருவர் புர்ஹா அணிந்திருக்கிறார். அந்த ஜோடி ஸ்கூட்டரின் மீது ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் அந்த ஜோடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர்.
அந்த கும்பலில் இருந்த ஒருவர் அந்த பெண்ணிடம் கேள்வி கேட்க தொடங்கினார். அந்த பெண்ணின் குடும்பம் என்ன, எங்கு இருந்து வருகிறீர்கள் என கேள்வி கேட்டார். தொடர்ந்து, வேறு நம்பிக்கை கொண்ட பெண்ணுடன் ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறாய் என அந்த ஆணை அவர்கள் மிரட்ட தொடங்கினர். தொடர்ந்து அந்த ஜோடியை அவர்கள் துன்புறுத்தினர்.
'உனக்கு வெட்கமாகவே இல்லையா...?'
அந்த வீடியோவில், 5 பேர் அடங்கிய கும்பல் அவர்களை மிரட்டியதை பார்க்க முடிந்தது. மேலும், அந்த பெண்ணை நோக்கி அவர்கள்,"புர்ஹா அணிந்துகொண்டு ஒரு ஆணுடன் இப்படி உட்கார்ந்திருக்க உனக்கு வெட்கமாகவே இல்லையா" என கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு துணை காவல் ஆணையாளர் கிரிஷ் கூறியதாவது,"அந்த ஜோடி ஸ்கூட்டரில் அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 5 பேர் அவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த பெண் புர்ஹா அணிந்திருக்கிறார். அந்த பெண்ணிடம் இருந்து பெற்ற புகாரின் அடிப்படையில் நாங்கள் புகாரை பதிவு செய்திருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
'பொறுத்துக்கொள்ள மாட்டோம்'
மேலும், அந்த சம்பவத்தில் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பரவிய மற்றொரு வீடியோவில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மரக்கட்டையால் அந்த ஆணை அடிப்பது தெரிந்ததாக கூறப்படுகிறது. பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் சிறுவர் ஆவார். துணை காவல் ஆணையாளர் கிரிஷ்,"குறிப்பாக அவர்கள், அந்த பெண்ணை தான் 'ஏன் அங்கு உட்கார்ந்திருக்கிறாய்?' என கேள்வி கேட்டுள்ளனர். விசாரணையில் மற்ற விஷயங்கள் தெரியவரும்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே,"கர்நாடகாவில் இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம். இது பீகாரோ, உத்தர பிரதேசமோ, மத்திய பிரதேசமோ அல்ல. கர்நாடகா முற்போக்கான மாநிலம் ஆகும்" என்றார்.
மேலும் படிக்க | 12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்! வினோத செய்தி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









