)
Bangalore Man Stabbed Wife To Death : பெங்களூருவில், 32 வயது பெண் ஒருவர், தனது கணவரால் பதினோரு முறை கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை, அவரது பன்னிரெண்டு வயது மகள் நேரில் பார்த்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவல், இதோ.
சந்தேக புத்தி!
ரேகா, என்கிற 32 வயது பெண், லோஹிதாஸ்வா என்பவருடன், பெங்களூருவில் கடந்த சில காலங்களாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. ரேகா, இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர். இவர், தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
லோஹித்ஸ்வாவும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இருவரும் காதலித்து வந்த நிலையில், வாடகைக்கு ஒரு வீடு எடுத்து, தங்கி வந்துள்ளனர். ரேகாவின் மூத்த மகளான 12 வயது சிறுமி, தனது தாய் மற்றும் அவரது காதலருடன் அந்த வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இரண்டாவது பெண் குழந்தை, ரேகாவின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறது.
கர்நாடகாவின் சிரா என்கிற நகரில் இருந்து பெங்களூருக்கு குடியேறிய பின்பு, ரேகா ஒரு கால் செண்டரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதே நிறுவனத்தில் லோஹித்ஸ்வாவும் ஓட்டுனராக பணியில் சேர்ந்திருக்கிறார்.
மனைவி வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த லோஹித்ஸ்வாவிற்கு சில நாட்களிலேயே தன் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த இவர், வேறு ஒரு நபருடன் அவருக்கு தொடர்பு இருக்குமோ என்கிற கோணத்தில் சந்தேகப்பட்டிருக்கிறார்.
கொடூரம்!
செப்டம்பர் 22 (நேற்று) காலை, ரேகா தனது 12 வயது குழந்தையுடன் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக காத்துக்கொண்டு, நின்றிருக்கிறார். அப்போது, அங்கு எதிர்பாராத விதமாக லோஹிதாஷ்வா வந்திருக்கிறார். பின்னர், ரேகாவ அவர் கொடூரமாக கத்தியால் தாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட முறை, அவர் தன் மனைவியை தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி, தள்ளியிருக்குமாறு கூறியிருக்கிறார். பின்பு, அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி இருக்கிறார்.
இந்த அத்தனை விஷயங்களையும், கொலை செய்யப்பட்ட ரேகாவின் 12 வயது மகள், இவையனைத்தையும் நேரில் பார்த்து இருக்கிறார். இது, இந்த கொடூர சம்பவத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. இப்போது அந்த நபரை போலீசார் பிடித்து விட்டதாகவும், தீவிர விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ