மகளின் ஆசிரியை விரித்த வலை... தொக்காக சிக்கிய தந்தை - கடைசியில் பெரிய ட்விஸ்ட்

Crime News In Tamil: தனது மாணவியின் தந்தையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து, அதை வைத்தே அவரிடம் மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை பறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 1, 2025, 09:50 PM IST
  • அந்த ஆசிரியைக்கு வயது 25 ஆகும்.
  • இதில் மற்றொரு 2 ஆண்களுக்கும் தொடர்பு.
  • நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வைத்து மிரட்டியிருக்கிறார்.
மகளின் ஆசிரியை விரித்த வலை... தொக்காக சிக்கிய தந்தை - கடைசியில் பெரிய ட்விஸ்ட்

Crime News In Tamil: பெங்களூருவை சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரை போலீசார் மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். அந்த பெண் ஆசிரியர் மாணவனின் தந்தையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துகொண்டு, அவரை பிளாக்மெயில் செய்து, அவரையே மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

Crime News: ரூ. 4 லட்சம் மோசடி

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் 25 வயதான அந்த ஆசிரியர் ஸ்ரீதேவி ருடகியை கைது செய்தது மட்டுமின்றி, கணேஷ் கலே (38), சாகர் (28) கிய இருவரையும் கைது செய்துள்ளனர். மாணவனின் தந்தை சுதீஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மிரட்டி அவரிடம் இருந்து சுமார் ரூ. 4 லட்சத்தை பெற்றுள்ளனர். 

அதுமட்டுமின்றி, ஸ்ரீதேவியுடன் அவர் நெருக்கமாக இருக்கும்போது, புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து சுதீஷை பிளாக்மெயில் செய்து மேலும் ரூ.20 லட்சத்தை கொடுக்கும்படி மிரடடி உள்ளனர்.

Crime News: பெண் ஆசிரியர் விரித்த வலை...

போலீசாரின் தகவலின்படி, சுதீஷ் மேற்கு பெங்களூரு பகுதியில் அவரது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வசித்து் வருகிறார். இவரது 5 வயது, கடைசி மகளை ஒரு பள்ளியில் கடந்த 2023ஆம் ஆண்டில் சேர்த்துள்ளார். தனது மகளை அந்த பள்ளியில் சேர்க்க சென்றபோது ஸ்ரீதேவியை, சுதீஷ் சந்தித்துள்ளார். அதன் பின்னரும், ஸ்ரீதேவி இவருடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்துள்ளார் என சுதீஷ் கூறுகிறார். தொடர்ந்து தனி மொபைல் மற்றும் சிம் கார்டை பெற்றுக்கொண்டு வீடியோ கால் பேசுவதும், மெசேஜ் அனுப்பவதுமாக பழக்கத்தை வளர்த்திருக்கின்றனர்.

Crime News: மிரட்ட தொடங்கிய ஸ்ரீதேவி

இதையடுத்து, அவர்களின் சந்திப்புகள் அனைத்தும் மிகவும் தனிப்பட்ட சந்திப்புகளாக மாறியுள்ளது. அந்த வகையில் அவர்கள் நெருக்கமாக இருந்ததை வைத்து சுதீஷை மிரட்டி ஸ்ரீதேவி 4 லட்ச ரூபாயை பெற்றுள்ளார். தன்னுடன் உறவில் இருப்பதை அவரது குடும்பத்தினரிடம் சொல்லிவிடுவதாக கூறி மிரட்டியிருக்கிறார். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 15 லட்ச ரூபாயையும் சுதீஷிடம் கேட்டிருக்கிறார் ஸ்ரீதேவி.

Crime News: வீட்டுக்கே வந்த ஆசிரியை

ஆனால், சுதீஷ் தயங்கவே உடனே ஸ்ரீதேவி அவரது வீடு தேடியே வந்துவிட்டாராம். வீட்டுக்கே வந்ததும் சுதீஷ் ஒரு 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து அவரை அனுப்பியிருக்கிறார். இதைதொடர்ந்து, அவரது தொழிலும் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் சுதீஷ் தனது குடும்பத்துடன் குஜராத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்கு அந்த குழந்தையின் மாற்றுச் சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது.

Crime News: கணேஷ், சாகர் கூட்டு

மாற்றுச் சான்றிதழை வாங்க சுதீஷ் பள்ளிக்குச் சென்றபோதுதான் அவருக்கு இதன் பின்னணி முழுமையாக தெரியவந்துள்ளது. அதாவது சுதீஷ் போலீசாரிடம் அளித்த தகவலின்படி, பள்ளிக்குச் சென்றபோது கணேஷ் மற்றும் சாகர் இருவரும் சுதீஷை மடக்கிபிடித்து ஸ்ரீதேவியின் அலுவலக அறைக்கு கொண்டுவந்துள்ளனர். 

அங்கு, சுதீஷ் ஸ்ரீதேவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை காண்பித்து அவரை மிரட்டியிருக்கின்றனர். மேலும், ரூ.20 லட்சத்தை தராவிட்டால், இவற்றை குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டியிருக்கின்றனர்.

Crime News: யார் யாருக்கு எவ்வளவு பங்கு? 

ஆனால், சுதீஷ் ஒருவழியாக அவர்களிடம் கெஞ்சி ரூ.5 லட்சத்தை குறைத்து, ரூ.15 லட்சத்தை தருகிறேன் என்றும் முதற்கட்டமாக ரூ.1.9 லட்சத்தை கொடுக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் அடம்பிடித்திருக்கின்றனர். 

மேலும், கடந்த மார்ச் 17ஆம் தேதி ஸ்ரீதேவி சுதீஷை போனில் அழைத்து பேசி உள்ளார், கொடுக்க வேண்டிய பணம் குறித்து நினைவுப்படுத்தி உள்ளார். மேலும், முன்னாள் காவல் அதிகாரிக்கு ரூ.5 லட்சம், கணேஷ் மற்றும் சாகருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் தனக்கு ரூ.8 லட்சம் என ஸ்ரீதேவி கூறியிருக்கிறார். 

உடனே, சுதீஷ் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அப்போதுதான் இதில் போலீசாரின் தலையீடு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீதேவி, கணேஷ், சாகர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க |  3 முறை கருக்கலைப்பு... பலமுறை பாலியல் வன்புணர்வு - பிரபல இயக்குநர் கைது!

மேலும் படிக்க |  பெண்ணின் வயிற்றில் 17 வருடங்களாக இருந்த 2 கத்தரிக்கோல்கள்! விநோத வைரல் செய்தி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News