)
இந்தியாவில் வருமான வரி தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் நீங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தாலும் அல்லது பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலும் உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வரலாம். உங்களது வங்கி கணக்கில் திடீரென்று அதிகமான பரிவர்த்தனை நடைபெற்றால் வங்கிகள் நேரடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும், பின்பு விசாரணையில் அந்த பணத்திற்கான ஆதாரத்தை நீங்கள் காண்பிக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் குறிப்பிட்ட அளவு மட்டுமே பணத்தை உங்களது சேமித்து கணக்கில் டெபாசிட் செய்ய முடியும். வருமானவரித்துரையிடம் இருந்து நோட்டீஸ் வராமல் தப்பிக்க ஒரு நிதியாண்டில் எவ்வளவு பணத்தை வாங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வருமானவரித்துறை நோட்டீஸ்!
வருமான வரித்துறையின் சட்டத்தின் கீழ் தனி நபர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய கூடாது. அப்படி செய்தால் அந்த பணத்திற்கான ஆதாரத்தையும் காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். உங்களது சேமிப்பு கணக்கில் ஒரு ஆண்டிற்குள் 10 லட்சத்திற்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டால் உங்களது வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். ஒரு நிதியாண்டில் பத்து லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால் அது அதிக மதிப்புள்ள பரிவர்த்தனையாக குறிக்கப்படுகின்றன. எனவே உங்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வரலாம்.
அதே போல 50 ஆயிரத்துக்கு மேல் பணமாக வங்கிகளில் டெபாசிட் செய்தால் அதற்கு பான் கார்டு அவசியம். அப்படி இல்லை என்றால் பார்ம் 60 அல்லது 61 போன்றவற்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு உங்களுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் அந்த குறிப்பிட்ட பணத்திற்கான ஆதாரத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக முதலீடுகள் அல்லது பரம்பரை சொத்துக்கள் என எப்படி வருமானம் வந்தது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுக்கு வணிகங்கள் மூலம் அதிகமான பணம் கிடைத்தாலும் அல்லது யாரேனும் விலைமதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்தாலும் நீங்கள் அதற்கு முறையான ரசீது மற்றும் சான்றுகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும். உங்களது வருமான வரியை சமர்ப்பிக்கும் போது உங்களது அனைத்து வருமானங்களையும் கணக்கில் கொண்டு வருவது அவசியம். பல வங்கி கணக்குகளை வைத்திருந்தாலும் அனைத்திற்கும் ஆன சரியான விவரங்களை உள்ளிடுவது அவசியம். இல்லை என்றால் வருமான வரி துறையின் கண்காணிப்பில் நீங்கள் உட்படுத்தப்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ