)
2025 ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடிவடைந்துள்ளது. இன்று முதல் ஜூலை தொடங்குகிறது. இந்த மாதம் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தவிர மாநில விடுமுறையை மற்றும் தேசிய விடுமுறைகள் காரணமாக வங்கிகள் 13 நாட்கள் மூடப்பட்டிருக்கும். ஆர்பிஐ வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை பட்டியலில் இந்த விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மாதம் நாடு தழுவிய பண்டிகை விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அடிக்கடி வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை தேதிகளை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் பணிகளை திட்டமிடுவது நல்லது.
ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை தவிர எந்தெந்த நாட்களில் ஜூலை மாதம் வங்கிகளுக்கு விடுமுறை என்று தெரிந்து கொள்ளுங்கள். பின்வரும் நாட்களில் வங்கிகள் விடுமுறையில் இருக்கும். இருப்பினும் இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஜூலை 3 (வியாழன்) - திரிபுராவின் அகர்தலாவில் கர்ச்சி பூஜை.
ஜூலை 5 (சனிக்கிழமை) - ஜம்மு காஷ்மீரில் குரு ஹரோபிந்த் ஜி பிறந்தநாள்.
ஜூலை 14 (திங்கட்கிழமை) - மேகாலயா, ஷில்லாங்கில் பெஹ் தேயின்க்லாம் விழா.
ஜூலை 16 (புதன்கிழமை) - உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ஹரேலா திருவிழா.
ஜூலை 17 (வியாழக்கிழமை) - மேகாலயாவின் ஷில்லாங்கில் யூ திரோட் சிங்-கின் நினைவு நாள்.
ஜூலை 19 (சனிக்கிழமை) - திரிபுராவின் அகர்தலாவில் கெர் பூஜை.
ஜூலை 28 (திங்கட்கிழமை) - சிக்கிம், காங்டாக்கில் ட்ருக்பா ட்ஷே-ஜி விழா.
ஜூலை மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும் அனைத்து வங்கிகளின் ஆன்லைன் சேவைகளும் எப்போதும் போல செயல்படும், குறிப்பாக ஏடிஎம்கள், மொபைல் ஆப்ஸ் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பயன்பாட்டில் இருக்கும். ஆனால் நNEFT அல்லது RTGS போன்ற சேவைகள் சில தாமதங்களை ஏற்படுத்தலாம். வங்கியின் விடுமுறை நாட்களை மனதில் வைத்துக் கொண்டு பெரிய பரிவர்த்தனைகளை திட்டமிட்டு கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ