)
Bank Employee Dies Over Wife Affair Accusations : 31 வயது வங்கி ஊழியர், தனது மனைவியின் கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பெங்களூருவை சேர்ந்த 31 வயது தனியார் வங்கி ஊழியர், தன் மனைவியால் தனக்கு வன்கொடுமை நேர்வதாக கூறி உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இவரது பெயர், ககன் ராவ். ஹோசாகேராஹல்லி என்கிற பகுதியை சேர்ந்த இவர் சாம்ராஜன் நகர் பகுதியை சேர்ந்த மேக்னா என்கிற பிசிஏ இறுதியாண்டு பயிலும் கல்லூரி மாணவியை 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
போலீசார் தகவல் தெரிவித்ததன் படி, மேக்னா தன் கணவர் மீது சந்தேகம் கொண்டிருந்ததாகவும் அவரை யாருடனாவது தொடர்பில் இருக்கிறாயா என்று அடிக்கடி கேட்டு சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருவருக்கும் அடிக்கடி விவாதம் எழுந்துள்ளது. இந்த சண்டையும் வாடிக்கையாகி இருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 7:45 மணியளவில் இருவருக்கும் மீண்டும் சண்டை மாண்டுள்ளது. பின்னர் மேக்னாவின் கணவர் கோபமாக ரூமுக்குள் சென்று சீலிங் பேனில் புடவையை உபயோகித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அறையை விட்டு 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகியும் கணவர் வெளியே வராததால், மேக்னா அறைக்கதவை தட்டியிருக்கிறார். திறக்கவில்லை என்பதும் பயந்து போன அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்திருக்கிறார். அப்போதுதான் தன் கணவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
ககன் ராவ்வை கீழே இறக்கும் போது இன்னும் உடலில் உயிர் இருப்பது தெரிந்திருக்கிறது. பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றிருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து அவரை விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றியிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். காவல் அதிகாரிகள் இவரது உடலை சோதனையிட்டுள்ளனர். அப்போது அவரிடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ககன், ஏன் இவ்வளவு பெரிய முடிவை சில நிமிடங்களில் எடுத்தார் என்பதற்கான கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் இருக்கிறது.
ககனின் குடும்பத்தினர் மேக்னாதான் இதற்கு காரணம் என்று கூறி, அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேக்னா, இதற்கு முன்னர் சாம்ராஜ் நகர் பெண்கள் காவல் நிலையத்தில் தன் கணவர் வெவ்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி புகாரளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
காவல் துறை அதிகாரிகள் இருவரையும் அந்த சமயத்தில் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. சமீபத்தில் தன் கணவர் வீட்டிற்கு வந்த மேக்னா, தன் கணவருடன் தொடர்ந்து அவரது நடவடிக்கை குறித்து சந்தேகத்தை எழுப்பி சண்டையிட்டதாக தெரிகிறது. உயிரிழந்த ககன், மனைவியின் சண்டைகளை மீறி வேறு பெண்களுடன் பேசி வந்ததாக போலீஸார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ