மெட்ரோ கட்டணம் அதிரடி உயர்வு! பிப்ரவரி 9 முதல் அமல்.. கிலோ மீட்டருக்கு இவ்வளவா?

Bengaluru Metro Fare Hike: பெங்களூருவில் மெட்ரோ ரயில் டிக்கெட் அதிரடியாக உயர்த்தப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு பிப்ரவரி 9ஆம் தேதி முதல்  உயரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Written by - Umabarkavi K | Last Updated : Feb 7, 2026, 05:40 PM IST
  • பெங்களூரு மெட்ரோ கட்டணம் உயர்வு
  • பிப்ரவரி 9 முதல் அமல்
  • காரணம் என்ன?
மெட்ரோ கட்டணம் அதிரடி உயர்வு! பிப்ரவரி  9 முதல் அமல்.. கிலோ மீட்டருக்கு இவ்வளவா?

Bengaluru Metro Fare Hike: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோவில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால், எப்போதுமே பெங்களூரு மெட்ரோவில் பயணிகள் கூட்டம் அதிமாகவே இருக்கும்.  தற்போது பெங்களூருவில் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  

Add Zee News as a Preferred Source

பெங்களூரூ மெட்ரோ கட்டணம் உயர்வு

மஞ்சள், பச்சை, ப்ளூ வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், பெங்களூருவில் மெட்ரோ கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது,  பிப்ரவரி 9அம் தேதி முதல் 5 சதவீதம் வரை மெட்ரோ கட்டணம் உயரக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10லிருந்து ரூ.11ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.90லிருந்து ரூ.95ஆகவும் உயரக் கூடும்.  தற்போது பெங்களூருவில் மெட்ரோ ரயில் இரண்டு கிலோ மீட்டர் வரை 10 ரூபாயும், 25 கிலோ மீட்டருக்கு மேல் பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி 5 சதவீத உயர்வுடன் அதிகபட்சம் ரூ.95 ஆக உயரு என எதிர்பார்க்கப்படுகிறது. 

0-2 கிலோ மீட்டர் தொலைவுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.11ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.20லிருந்து ரூ.21ஆகவும், 4 முதல் 6 கி.மீட்டருக்கு ரூ.30லிருந்து ரூ.31ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 முதல் 8 கிலோ மீட்டருக்கு கட்டணம் ரூ.40லிருந்து ரூ.42 ஆகவும், 8 முதல் 10 கி.மீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.50லிருந்து ரூ.53ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

10 முதல் 15 கிலோ மீட்டருக்கான கட்டணம் ரூ.60லிருந்து ரூ.63 ஆகவும், 15 முதல் 20 கிலோ மீட்டருக்கு ரூ.70லிருந்து ரூ.74 ஆகவும், 20 முதல் 25 கிலோ மீட்டருக்கு ரூ.80லிருந்து ரூ.84 ஆகவும், 25 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.90லிருந்து ரூ.95ஆகவும் கட்டணம்  என 10 அடுக்குகளாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மெட்ரோ கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் பட்சத்தில், நாட்டிலேயே அதிக கட்டணம் உள்ள மெட்ரோவாக பெங்களூரு இருக்கும்.  மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வுக்கு பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

காரணம் என்ன?

 கட்டண நிர்ணயக் குழு பெங்களூரு மெட்ரோ கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது.  இந்த குழு மெட்ரோ ரயில் இயக்க செலவுகளின் அடிப்படையில் கட்டணங்களில் அவ்வப்போது திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. எரிசக்தி கட்டணங்கள், தொழிலாளர் செரலவு, பராமரிப்பு, மெட்ரோ விரிவாக்கம் போன்ற காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.  மெட்ரோ ரயில் நிதி இழப்புகளை குறைப்பதற்காகவும், நிதி ரீதயாக சீராக வைத்திருப்பதற்கு கட்டண உயர்த்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

கைவிரித்த கர்நாடக அரசு

பெங்களூரூ மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு குறித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மெட்ரோ ரயில் கட்டணங்கள்  மாநில அரசால் தீர்மானிக்கப்படுவதில்லை.  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன கட்டண நிர்ணயக் குழு இந்த முடிவை எடுக்கிறது.   கட்டண நிர்ணயம் மெட்ரோ ரயில்வேஸ் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002-ன் கீழ் இந்த கட்டணத்தை நிர்ணயிக்கிறது. 

இதன்படி, குழு தனது பரிந்துரைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் பிரிவு 37-ன் கீழ், மெட்ரோ நிர்வாகம் அவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த பரிந்துரைகளை ரத்து செய்யவோ அல்லது மீறவோ மாநில அரசாங்கத்திற்கோ அல்லது பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கோ சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை” என்று கூறினார். 

மேலும் படிக்க:  பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ ரயில் எப்போது? முக்கிய அப்டேட்.. குஷியில் சென்னை வாசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News