)
பலரும் முதலீடு செய்ய நல்ல ஒரு திட்டங்களை தேடி வருகின்றனர். சிலருக்கு மியூச்சுவல் ஃபண்ட், FD போன்றவற்றில் விருப்பங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அஞ்சல் அலுவலகத்தையே விரும்புகின்றனர். காரணம் சந்தை அபாயங்கள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானம் தரும் முதலீட்டு திட்டமாக அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உள்ளது. அந்த வகையில், சாமானிய மக்களும் மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை சேமித்து, ஐந்து ஆண்டுகளில் ஒரு கணிசமான வட்டியை பெற உதவும் ஒரு மிகச்சிறந்த திட்டம், தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி ஆகும். இந்த திட்டத்தில், மாதம் ரூ.4,000 முதலீடு செய்வதன் மூலம், ஐந்து ஆண்டுகளில் வட்டியாக மட்டும் சுமார் ரூ.45,459 வரை பெற முடியும். இந்த திட்டத்தின் மற்ற சிறப்பம்சங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தொடர் வைப்பு நிதி திட்டம் இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் ஒரு ஐந்து வருட கால வைப்பு திட்டமாகும். இதில், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். இந்த முதலீட்டிற்கு, அரசு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும். தற்போது, செப்டம்பர் 2025 நிலவரப்படி இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது.
மாதாந்திர முதலீடு: ரூ.4,000
முதலீட்டு காலம்: 60 மாதங்கள்
மொத்த முதலீடு: ரூ.4,000 x 60 = ரூ.2,40,000
தற்போதைய வட்டி விகிதம்: 6.7%
மேற்கண்ட கணக்கீட்டின்படி, ஐந்து ஆண்டுகள் முடிவில், நீங்கள் முதலீடு செய்த ரூ.2,40,000க்கு, வட்டியாக மட்டும் தோராயமாக ரூ.45,459 கிடைக்கும். மொத்த முதிர்வு தொகையாக நீங்கள் கிட்டத்தட்ட ரூ.2,85,459 பெறுவீர்கள். இது, பங்கு சந்தை போன்ற அபாயகரமான முதலீடுகளில் ஈடுபட விரும்பாதவர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான வருமானமாகும்.
இது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால், உங்கள் முதலீட்டிற்கு 100% பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வருமானம் உண்டு. மாதம் குறைந்தபட்சம் ரூ.100 முதல் முதலீட்டை தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. ஓராண்டு முடிந்த பிறகு, உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 50% வரை கடனாக பெறும் வசதி உள்ளது. கணக்கு தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தேவைப்பட்டால் கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ளும் வசதியும் உண்டு. ஐந்து வருட முதிர்வு காலத்திற்கு பிறகும், விரும்பினால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம். பெரியவர்கள் தனியாகவோ அல்லது மூன்று பேர் வரை கூட்டாகவோ இந்த கணக்கை தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் பெயரிலும் இந்த கணக்கைத் தொடங்க முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ