GPS Based Tax Collection: இனிமேல் சுங்கச்சாவடிக்கு குட் பை சொல்லக்கூடிய காலம் விரைவில் வரவிருக்கிறது. உங்களால் நம்ப முடியவில்லையா? ஆமாம், அதுதான் நிதர்சனம். சுங்கச்சாவடிகளுக்கு குட்பை சொல்ல ஆயத்தமாகி கொண்டிருக்கிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம். வரும் மே 1 முதல் ஜிபிஎஸ் மூலமாக சுங்க கட்டணம் வசூல் செய்வதற்கான அமைப்பு அமலுக்கு வருகிறது. அதுக்குறித்து பார்ப்போம்.
சுங்கக்கட்டணம் எப்படி வசூலிக்கப்படும்
சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டிடங்கள் அகற்றப்படும் என்பதால், சுங்க கட்டணமே வசூலிக்கப்படாது என அர்த்தம் கிடையாது. சுங்கக்கட்டணம் கண்டிப்பாக உண்டு. அதற்கு மாற்று முறை கொண்டு வரப்படுகிறது.
அதாவது நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு பதிலாக சாலையில் செல்லும் வாகனத்திடமிருந்து சுங்க வரி வசூலிக்கப்படும். இதற்காக சுங்கச்சாவடிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்படும். அதன் மூலம், வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஃபாஸ்டேக் கணக்கிலிருந்து சுங்கத் தொகை வசூலிக்கப்படும்.
ஜிபிஎஸ் சுங்க வசூல் விரைவில் அமல்பத்து வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை கிராஸ் செய்யும் போது பணம் கொடுத்து சுங்க கட்டணம் செலுத்தி வந்தோம். அதன்பிறகு ஃபாஸ்ட் டேக் கொண்டு வரப்பட்டது. கடந்த சில வருடமாக ஃபாஸ்ட் டேக் கட்டாயம் எனக் கூறப்பட்டது. உங்களிடம் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் இருந்தால் போதும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது சுங்கக் கட்டணம் செலுத்த வாகனத்தை நிறுத்த தேவையில்லை. கடந்து செல்லலாம். தற்போது அடுத்த கட்டமாக "ஜிபிஎஸ் சுங்க வசூல்" அமலுக்கு வர இருக்கிறது.
ஜிபிஎஸ் சுங்க வசூல் என்றால் என்ன?
இதற்காக ஒவ்வொரு வண்டியிலும் "ஆன் போர்ட் யூனிட் ஓபியூ" என்பதை இணைப்பார்கள். இதன்மூலம் GNSS செயற்கைகோள் அமைப்பு மூலம் நெடுஞ்சாலையில் நீங்கள் பயணம் செய்யும் போது கண்காணிக்கப்படும். எவ்வளவு தூரத்துக்கு பயணிக்கிறீங்களோ அதற்கான பணம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும். இனிமேல் சுங்கச்சாவடியில் நின்று செல்லவோ, மெதுவாக செல்ல வேண்டிய அவசியமோ கிடையாது. நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யலாம். உங்களுடைய பயண தூரத்துக்கு தகுந்த மாதிரி பணம் பிடித்து கொள்ளப்படும்.
ஜிபிஎஸ் சுங்க வசூல் பலன்கள் என்ன?
இந்த ஜிபிஎஸ் சுங்க வசூல் மூலம் என்ன பலன்கள் கிடைக்கும் எனப் பார்த்தால், காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளலாம். சுங்கச்சாவடியில் ஏற்படும் டிராஃபிக் பிரச்சனை இருக்காது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. செலவீனம் குறையும்.
ஜிபிஎஸ் சுங்க வசூல் சவால்கள் என்ன?
ஜிபிஎஸ் சுங்க வசூலில் இருக்கும் சவால்கள் என்னென்ன எனப்பார்த்தால், ஆரம்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். தற்போது நாம் பயன்படுத்தும் வாகனங்களில் "ஓபியூ ஆன் போர்ட் யூனிட்" கிடையாது. எனவே அதை வாங்கி பொருத்த வேண்டியிருக்கும். மேலும் நமது வங்கி கணக்கை இணைக்க வேண்டியது இருக்கும். தனியுரிமை சிக்கல் இருக்கிறது. உங்கள் வண்டி எங்கே செல்கிறது? எந்த பக்கம் திரும்புகிறது? இப்படி அனைத்துமே கண்காணிக்கப்படும். எனவே தனிமனிதனின் பிரைவசியை பாதிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.
மேலும் படிக்க - FASTag புதிய விதிகள் அமல்.. கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க செய்ய வேண்டியவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









