)
இந்திய ரிசர்வ் வங்கி, தங்க நகை கடன் தொடர்பான விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கடன் வாங்குபவர்களை பாதுகாக்கவும், சந்தையை மேலும் ஒழுங்குபடுத்தவும் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் சிலருக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தங்கம் வாங்க கடன் கிடையாது: இனி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், நகைகள், நாணயங்கள், தங்க பத்திரங்கள் அல்லது தங்கம் சார்ந்த பரஸ்பர நிதிகள் போன்ற எந்த வடிவத்திலும் தங்கம் வாங்குவதற்காக கடன் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப வழங்கப்படும் கடன் தொகைக்கான வரம்பு மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடன் தொகைக்கு ஏற்ப, தங்கத்தின் மதிப்பில் எவ்வளவு சதவீதம் கடனாக பெற முடியும் என்பது மாறும்.

Bullet Repayment திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள், இனி அசல் மற்றும் வட்டி இரண்டையும் 12 மாதங்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும். முன்பு இருந்த வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பிக்கும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடன் காலம் தாண்டுவதை தடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். அதே போல கடன் முழுமையாக அடைக்கப்பட்டவுடன், அடகு வைத்த தங்கத்தை அதே நாளிலோ அல்லது அதிகபட்சமாக 7 வேலை நாட்களுக்குள்ளோ கடன் கொடுத்த நிறுவனம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை கடன் வாங்குபவர்களின் நலனை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ