CBSE 10th Standard Board Exams: வரும் 2026ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓராண்டில் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
CBSE approves Class 10 board exams twice a year from 2026, confirms Exam Controller Sanyam Bhardwaj. First phase mandatory, second phase optional — best score to be retained: CBSE pic.twitter.com/RMZQDa8Mxf
— ANI (@ANI) June 25, 2025
வரும் 2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் 10ஆம் வகுப்புக்கு மட்டும் இரண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதன்மூலம், தேர்வு அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் மாணவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள மாணவர்கள் ஒரு வருடம் முழுவதும் காத்திருக்காமல் விரைவாகவே ஒரு வாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவரும் பிப்ரவரி நடுப்பகுதியில் திட்டமிடப்பட்ட முதல் தேர்வை எழுத வேண்டும். அதே நேரத்தில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த விரும்புவோர் அல்லது மூன்று பாடங்களில் குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள் மே மாதத்தில் இரண்டாவது தேர்வை எழுதலாம். இது 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கையின் பரிந்துரையின்படி, நெகிழ்வான மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற மதிப்பீடுகளை வழங்க இந்த இரண்டு முறை தேர்வு நடத்தப்படுகிறது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 2026ஆம் ஆண்டு முதல் ஓராண்டுக்கு இரண்டு முறை நடைபெறும், முதல் கட்டமாக கல்வியாண்டின் பிப்ரவரியிலும், இரண்டாம் கட்டமாக கல்வியாண்டின் மே மாதத்திலும் நடைபெறும். முதல் தேர்வு அனைவரும் எழுத வேண்டும். அது கட்டாயம். இரண்டாம் கட்ட தேர்வுகள் விருப்பத்தேர்வாகும்.
முதல் கட்டத்திற்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும். மே மாதத்தில் எழுதப்படும் தேர்வுகள் இரண்டாம் கட்ட முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும். இது மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த வாய்ப்பளிக்கிறது. இரண்டு தேர்வு கட்டங்களுக்கும் பொருந்தும் வகையில், கல்வியாண்டில் ஒரு முறை மட்டுமே உள் மதிப்பீடு தேர்வு (Internal) நடத்தப்படும்.
சிபிஎஸ்இ இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில், "சிபிஎஸ்இ-யின் கொள்கை புதிய தேர்வர்கள், அத்தியாவசியமாக மீண்டும் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வில் இன்னும் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் இரண்டாவது தேர்வை எழுதும் வாய்ப்பை பெறுவார்கள்" என குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | லக்னோ டூ நாசா வரை... 'விண்வெளி நாயகன்' சுபான்ஷு சுக்லா கடந்து வந்த பாதை!
மேலும் படிக்க | ஜூலை 1 முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு? இனி டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









