Bihar Assembly Election 2025, 5 Key Leaders: வரும் நவம்பர் 22ஆம் தேதியோடு, நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வருகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பீகார் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை கடந்த அக். 7ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அப்போது முதல் பீகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
Bihar Election 2025: பீகார் தேர்தல் தேதிகள் அறிவிப்பு
நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. பீகார் தேர்தல் என்பது அனைத்து தேர்தல்களை விடவும் நடத்துவதில் அதிக பிரச்னைகள் இருக்கும் நிலையில் சுமார் 8.5 லட்ச அதிகாரிகள் பீகார் தேர்தலில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
Bihar Election 2025: NDA vs மகாபந்தன்
நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியை அமைக்க அதன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாபந்தன் கூட்டணியும் தங்களின் தேர்தல் தொகுதி பேச்சுவார்த்தையை செய்து வருகிறது.
Bihar Election 2025: பீகாரின் முக்கிய 5 தலைவர்கள்
பீகார் தேர்தல் இரு தரப்புக்கும் மிக முக்கியமானதாகும். தேசிய அளவில் பீகார் சட்டப்பேரவை தேர்தலை உற்றுநோக்கி வருகின்றனர். ஆட்சியை தக்கவைக்க தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆட்சியை பிடித்து தேசியளவில் கவனம் பெற மகா கூட்டணியும் அதிகளவில் முயற்சிக்கும். தேர்தல் வியூக வகுப்பாளராக அறியப்பட்டவரும், ஜான் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோரும் தேர்தலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். அந்த வகையில், பீகார் தேர்தலில் மிக முக்கியமான 5 ஆளுமைகள் யார் என்பதை இங்கு காணலாம்.
Bihar Election 2025: சாம்ராட் சௌத்ரி
பாஜகவின் முக்கிய தலைவரான இவருக்கு களத்தில் பெரிய ஆதரவு இருக்கிறது. மேலும் பீகாரில் பாஜகவின் இருப்பையும் இவர் பலப்படுத்தி இருக்கிறார். பீகார் அரசியலை வடிவமைப்பதிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். தற்போது துணை முதலமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் செயலாற்றி வரும் இவர் மாநில வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துக்கூடியவர். இவருக்கு பீகாரில் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. இந்நிலையில், இந்த தேர்தலிலும் இவர் பீகார் அரசியலில் முக்கிய இடத்தை பிடிப்பார்.
Bihar Election 2025: சிராக் பஸ்வான்
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முக்கியமான தலைவராக இருப்பார். இளந்தலைவரான இவர் வாக்காளர்களுடன நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இவரது தந்தையின் புகழையும் சிறப்பாக தன்வசப்படுத்தியிருக்கிறார். மக்களவை தேர்தலில் இவர் தனது பலத்தை நிரூபித்திருப்பதால் சட்டப்பேரவையிலும் அதிகளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிகளை கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Bihar Election 2025: பிரசாந்த் கிஷோர்
2014இல் பிரதமர் மோடியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அதன்பின் பல்வேறு அரசியல் கட்சியுடன் பயணித்த இவர், பீகாரில் தனிக்கட்சி தொடங்கும் அளவிற்கு உயர்ந்தார். இவரத் ஜன் சுராஜ் கட்சி களத்தில் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் இவரது கள புரிதல் மற்றும் தேர்தல் வியூகம் ஆகியவற்றின் மூலம் இந்த தேர்தலில் குறிப்பிட்டு வாக்கு சதவீதத்தை பெற்று, ஜன் சுராஜ் கட்சியின் எழுச்சியை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bihar Election 2025: தேஜஸ்வி யாதவ்
மகாபந்தன் கூட்டணியின் முக்கிய தலைவராகவும், நிதிஷ்குமாருக்கு சவால் அளிக்கக்கூடியவராகவும் விளங்குபவர் தேஜஸ்வி யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் இவரது தலைமையில் மீண்டும் பீகாரில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயலாற்றி வருகிறது. இவர் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் 2020 தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. முன்னாள் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ், அவரது தந்தை லாலு பிரசாத் யாதவிற்கு பின் களத்தில் மக்கள் ஆதரவுடன் இயங்கி வருகிறார், இளைஞர்களின் அபரிமிதமான துணையும் இவருடன் இருக்கிறது. மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ரேஸிலும் இவர் முதன்மையானவராக இருக்கிறார்.
Bihar Election 2025: நிதிஷ் குமார்
பீகாரில் தேர்தலில் இன்னும் X Factor உடன் திகழ்பவர் என்றால் அது நிதிஷ் குமார் தான். அவர் கூட்டணி வைக்கும் அணியே ஆட்சியை கைப்பற்றுகிறது எனலாம். பாஜக பக்கமும், எதிர்க்கட்சிகள் பக்கமும் அடிக்கடி தாவி வந்த நிதிஷ்குமார் தற்போது பாஜகவிடமே நிலைப்பெற்றுவிட்டார். தேசிய ஜனநாயக கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் இருக்கிறார். இவர் சட்டப்பேரவையில் அதிக வெற்றிகளை கூட்டணிக்கு பெற்றுத் தரும்பட்சத்தில் மத்தியிலும் இவரது கட்சிக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க |அரசு ஊழியர்களே ஸ்வீட் எடுங்க... தீபாவளி பரிசாக DA உயர்வு - மாநில அரசு அறிவிப்பு
மேலும் படிக்க | இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! பிரதமர் மோடியின் புதிய திட்டம்!
மேலும் படிக்க | பீகார் சட்டமன்ற தேர்தலில் வருகிறது பெரிய மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









