பீகார் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு: லாலுவின் மகன் தேஜாஸ்வி யாதவ் போராட்டம்!!
பீகார் சட்டசபையில் பெரும்பான்மை நிருபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து வரும் வேளையில், தேஜாஸ்வி யாதவ் போராட்டம்
பீகார் மாநிலத்தில் புதிய முதல் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் இரண்டு நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்று பீகார் மாநில சட்டசபையில் தன் பலத்தை நிரூபிக்க சிறப்பு கூட்டத்தை நடத்துகிறார் நிதிஷ்குமார்.
இந்நிலையில், பெரும்பான்மை நிருபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து வரும் வேளையில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் பீகார் சட்டசபைக்கு வெளியில் போராட்டம் நடத்தி வருகிறார். அப்பொழுது அவர், எங்களிடம் 80 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நிதிஷ்குமாரின் செயல் பீகாரில் மக்களிடையே பெரும் கோவத்தையும், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நாங்கள் எப்போதும் முதலமைச்சர் மீது எந்த அழுத்தமும் கொடுத்தது இல்லை. நிதிஷ் ஜி உங்களுக்கு வெட்கம் இல்லையா? சுஷில் மோடிக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கீறிர்கள் எனக் கோவமாக கூறியுள்ளார்.
பீகார் மாநில சட்டசபையில் 243 தொகுதிகள் உள்ளன. தங்கள் பெரும்பான்மை நிருபிக்க 123 தொகுதிகள் தேவை. தற்போது ஐக்கிய ஜனதா தளம்+பா.ஜ.வுக்கு, 124 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மேலும் 3 சுயேச்சைகளும், பா.ஜ., கூட்டணிக் கட்சி சார்பில் 5 பேரும் என மொத்தம் 132 எம்.எல்.ஏ.,க்கள் என தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு உள்ளது.