பீகார் தேர்தல் முடிவுகள் 2025: இன்று ஒரு தீர்க்கமான நாள்! வாக்கு எண்ணிக்கை எத்தனை மணிக்கு?

Bihar Election Results 2025: பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட முந்தைய கருத்துக் கணிப்புகளில் NDA ஆட்சி அமைக்கும் என்றும், மகா கூட்டணி ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பெறாது என கணிக்கப்பட்டது. இவை வெறும் கருத்துக் கணிப்புகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று (நவம்பர் 14) வெளியிடப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 14, 2025, 05:38 AM IST
பீகார் தேர்தல் முடிவுகள் 2025: இன்று ஒரு தீர்க்கமான நாள்! வாக்கு எண்ணிக்கை எத்தனை மணிக்கு?

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025: பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலில் சாதனை அளவில் 66.90% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இன்று (2025 நவம்பர் 14) பீகார் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த முறை ஆட்சி மாறுமா அல்லது என்டிஏ கூட்டணி (NDA Alliance) மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்?, பீகார் சட்டமன்றத்தில் மொத்த இடங்கள் எத்தனை?, ஆட்சி அமைக்க எவ்வளவு பெரும்பான்மை வேண்டும்?, பாதுகாப்பு ஏற்பாடுகள் நிலவரம்?, கருத்துக்கணிப்பு முடிவுகள்? போன்ற விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

Bihar Election Results 2025: போட்டியிட்ட கட்சிகள்

பீகாரில் முக்கியப் போட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) எதிர்க்கட்சியான மகா கூட்டணிக்கும் (MGB) இடையே உள்ளது. ஆளும் NDA-வில் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் ஜனதா தளம் (ஐக்கியம்) உள்ளிட்ட பிற கட்சிகள் அடங்கும். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் காங்கிரஸ் ஆகியவை மகா கூட்டணியில் முக்கிய கட்சிகளாக உள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜான் சூரஜ் கட்சி மற்றும் அசாதுதீன் ஒவைசியின் AIMIM ஆகியவையும் களத்தில் உள்ளன.

Bihar Election Results 2025: யாருக்கு மக்கள் செல்வாக்கு?

நிதிஷ் குமாரின் 20 ஆண்டுகால ஆட்சி மற்றும் மத்தியில் பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியின் பலத்தின் அடிப்படையில் ஆளும் NDA மீண்டும் தேர்தலை எதிர்பார்த்து களத்தில் நின்றது. எதிர்க்கட்சியான மகா கூட்டணி ஆளுமை ஆட்சிக்கு எதிரான பிரச்சனைகள், தவறான நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு, வாக்குறுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தது. 

Bihar Election Results 2025: வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? 

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று, நவம்பர் 14 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும். இந்த முறை, NDA மீண்டும் அரசாங்கத்தை அமைக்குமா அல்லது மகா கூட்டணியா என்பதுதான் விவாதம். அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் கிஷோரின் ஜான் சூரஜ் கட்சி என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதும் இங்கே முக்கியம்.

Bihar Election Results 2025: பீகார் தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்? 

நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும். 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இப்போது அனைவரின் பார்வையும் தேர்தல் முடிவுகளில் உள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்படும்போது, காலை 8 மணி முதல் சுமார் 11 மணி வரைக்குள் ஓரளவுக்கு ஊகிக்க முடியும், எந்த கூட்டணி பெரும்பான்மை நோக்கி செல்கிறது என, ஆனால் பீகார் சட்டமன்றத்தில் மொத்த இடங்களான 243 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்க இரவு வரை நீளும் எனக் கணிக்கப்படுகிறது.

Bihar Election Results 2025: மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் விளக்கம்

Bihar Election Results 2025:  வாக்கு எண்ணிக்கை நிலவரம்

மாநிலத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் நவம்பர் 14 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.

Bihar Election Results 2025:  பாதுகாப்பு ஏற்பாடுகள்24/7 CCTV கண்காணிப்பு

அறிக்கைகளின்படி, மத்திய ஆயுத துணை ராணுவப் படைகள் (CAPF) உள்நாட்டிலும், மாநில காவல்துறை வெளிப்புறத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன. 24/7 CCTV கண்காணிப்பு மற்றும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Bihar Election Results 2025: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

ஜேவிசி, மேட்ரிக்ஸ் மற்றும் சாணக்யா உள்ளிட்ட பெரும்பாலான அமைப்புக்கள் , தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெறும் என்று கணித்துள்ளன, மகா கூட்டணி கணிசமாக பின்தங்கியுள்ளது.

Bihar Election Results 2025: கருத்துக்கணிப்புகளை நிராகரித்த தேஜஸ்வி யாதவ்

பிஜேபியின் உயர்மட்டத் தலைமையின் "அறிவுறுத்தல்களின்" பேரில் இத்தகைய கணிப்புகள் வெளியிடப்படுவதாகக்கூறி, ஆர்ஜேடி தலைவர் மற்றும் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யின் தேஜஸ்வி யாதவ், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நிராகரித்தார். மேலும் மகா கூட்டணி அமோக பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் என்று கூறினார்.

மேலும் படிக்க - நிதிஷ் குமார் vs தேஜஸ்வி யாதவ்: பீகாரில் ஆட்சியை தீர்மானிக்கும் பெண்கள்... அரியணை யாருக்கு?

மேலும் படிக்க - தேஜஸ்வி முதல்வர் கனவில்... மண்ணள்ளி போட்ட PK - மகா கூட்டணிக்கு பெரிய ஆப்பா?

மேலும் படிக்க - பெண்களுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை... அதுவும் ஒரே தவணையில்... தேஜஸ்வியின் மாஸ் பிளான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News