Bizarre Viral Video: வினோதமான சம்பவம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது. நகைச்சுவை திரைப்படங்களில் ரசிகர்களை குழுங்க குழுங்க சிரிக்க வைக்க இதுபோன்ற காட்சிகளை வைப்பார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் நிகழும் போது நிச்சயம் அதிர்ச்சியையே அளிக்கிறது எனலாம். அப்படியென்ன ஹரியானாவில் நடந்துவிட்டது என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது... அதனை இங்கு காணலாம்.
Bizarre Viral Video: சூட்கேஸ் உள்ளே இருந்த பெண்
ஹரியானாவின் சோனிபட் நகரில் உள்ள OP ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் இந்த வினோத சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, அங்கு பயின்று வரும் மாணவன் ஒருவன், பெண் ஒருவரை சூட்கேஸ் உள்ளே அடைத்துவைத்து யாருக்கும் தெரியாமல் அவரை ஆடவர் விடுதிக்குள் கொண்டுச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அங்குள்ளவர்களிடம் அவர் மாட்டிக்கொண்டார்.
Bizarre Viral Video: வைரலாகும் வீடியோ
இந்த சம்பவம் அனைத்தும் அங்கு ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் இணையத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பல்கலைக்கழக பாதுகாவலர்கள் அந்த சூட்கேஸை திறக்கும்போது உள்ளே இருந்து பெண் ஒருவர் வெளியே வந்தார். இதை பார்த்ததும் பலருக்கும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் எழுந்தது. மேலும், சமூக வலைதளங்களில் மாணவர்களிடையேவும் இந்த வீடியோ பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது, அவர்களும் தங்களின் கருத்துகளை சுட சுட பகிர்ந்து வருகின்றனர்.
Bizarre Viral Video: எப்படி கண்டுபிடித்தனர்?
அந்த மாணவன், அந்த பெண்ணை சுட்கேஸில் அடைத்து ஆடவர் விடுதிக்கு கொண்டுசெல்கிறார் என பல்கலைக்கழக பாதுகாவலர்களுக்கு எப்படி தெரியவந்தது, அவர்கள் எப்படி அதனை கண்டுபிடித்தார்கள் என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால், இதுகுறித்து சில கருத்துகளும் நிலவுகின்றன. சூட்கேஸ் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது, படிக்கட்டுகளில் இறக்கியபோது உள்ளே இருந்து அந்த பெண்ணின் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
Bizarre Viral Video: அந்த பெண்ணும் அங்கு மாணவியா?
அந்த பெண் குறித்த தகவல்களும் உறுதிசெய்யப்படவில்லை. அதாவது அந்த பெண் அந்த பல்கலைக்கழக்கத்தில் பயிலும் மாணவிதானா, அல்லது வேற்று நபரா என்பது தெரியவில்லை. இதுவரை, பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விஷயத்தில் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
Bizarre Viral Video: நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ வெளியாகியிருப்பதன் மூலம் பல்கலைக்கழக வளாக பாதுகாப்பு குறித்தும், இதுபோன்ற ஒரு சூழ்நிலை எவ்வாறு முதலில் வெளிப்பட்டது என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது. கூடுதலாக, சம்பந்தப்பட்ட மாணவர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தாலும், @TheSquind என்ற X பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ சுமார் 7 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்கள் போட்டு, நகைச்சுவையான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதுபோல் தங்கள் விடுதியிலும் நடந்துள்ளது என்றும் ஒருவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்து நண்பருடன் சென்ற இஸ்லாமிய பெண்... அடுத்து நடந்த அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









