வட இந்தியாவின் போஜ்புரி சூப்பர் ஸ்டார் தினேஷ் லால் யாதவ் 'நிரஹுவா', வரும் மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவிற்கு எதிராக போட்டியிடுவாதக அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலில் களமிறங்கவிருப்பதாக அறிவித்த போஜ்புரி நட்சத்திரமான தினேஷ் லால் யாதவ் நிரஹுவா, பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்தார். உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நடிகர் லக்னோவில் அதிகாரப்பூர்வமாக இணைந்த செய்தி உத்திரபிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியது.


இந்நிலையில் தற்போது இவர் வரும் மக்களவை தேர்தலில் ஆழ்மகார் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக கூட்டணிக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ள அகிலேஷ் யாதவ் போட்டியிட இருப்பாதக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நிரஹூவா போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நிரஹுவா, வட இந்தியாவில் பெரும்பாண்மை மக்களால் பேசப்படும் போஜ்பூரி மொழி திரைப்படங்களில் நடித்துவருகின்றார்.


தனது நடிப்பிற்காக பல பாராட்டுகளையும் பட்டங்களையும் பெற்றவர். 'பார்டர்' மற்றும் 'ஷெர்-இ-ஹிந்துஸ்தான்' போன்ற நாட்டினுடைய தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்தவர்.


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11, 2019 முதல் தொடங்கி ஏழு கட்டங்களில் நடைபெறும். பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறும். தற்போதைய மக்களவையின் காலம் ஜூன் 3-ஆம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.