)
வியாழக்கிழமை காலை டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே வெடிச்சத்தம் கேட்டதை தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு காலை 9:18 மணிக்கு தகவல் கிடைத்தது. அதற்கான காரணத்தை விசாரிக்க காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவம் குறித்து காலை 9:18 மணிக்கு தகவல் கிடைத்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்தது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. பின்னர் டெல்லி போலீசார் அப்பகுதியை ஆய்வு செய்து சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
நடந்தது என்ன?
வியாழக்கிழமை காலை டெல்லியின் மஹிபால்பூரில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக அந்த இடத்திற்கு சென்றனர்.
இடத்தை அடைந்த அதிகாரிகளுக்கு வெட்ப்பு தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. விசாரணையின் போது, தௌலா குவான் நோக்கிச் சென்ற டிடிசி பேருந்தின் பின்புற டயரில் இருந்து சத்தம் வந்ததாக ஒரு காவலர் உறுதிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து நிலைமை இயல்பாக உள்ளது என்றும் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது நபர்களைக் கண்டால் உடனடியாக தெரிவிக்குமாறும் காவல்துறை அறிவித்துள்ளது.
செங்கோட்டை குண்டுவெடிப்புக்குப் பிறகு உயர் எச்சரிக்கை நிலை
டெல்லியின் செங்கோட்டைக்கு வெளியே நடந்த ஒரு பயங்கர வெடிப்புக்குப் பிறகு டெல்லி முழுதும் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது. இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். பழைய டெல்லியின் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றில் நடந்த இந்த குண்டுவெடிப்பு, கடைகளின் முன்பகுதிகளை உடைத்து, நகரம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
செங்கோட்டை தாக்குதலை அதிகாரிகள் ஒரு உயர் தீவிர பயங்கரவாதச் செயல் என்று வர்ணித்துள்ளனர். இது பொது இடங்களை குறிவைத்து நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ