)
Bihar Bride Refuse To Marry Groom Who Hide Eye Disability: திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இப்போது எல்லாம் நடக்கும் திருமணங்கள் அப்படி எதுவும் இல்லை. சிறு சிறு விஷயங்களால் இரண்டு குடும்பத்தினரும் சண்டையிட்டு கடைசி நேரத்தில் திருமணம் நின்ற சம்பவங்கள் நடந்துள்ளது. சில நேரங்களில் மணப்பெண்ணும், மணப்பெண்ணும் சண்டையிட்டு திருமணம் நின்றுள்ளது. இப்படியாக பல விஷயங்களுக்கு மணமேடை வரை வந்து திருமணங்கள் நின்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது.
அப்படியொரு சம்பவம் தான் தற்போது பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. இது புதிய விஷயம் இல்லையென்றால், ஆச்சியத்தை தரும் விஷயமாக மாறி இருக்கிறது. அந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
பீகார் மாநிலம் பெட்டியா மாவட்டத்தின் சஹோத்ரா பகுதிக்குட்பட்ட பின்பைரியா கிராமத்தில் கடந்த வாரம் நடந்த திருமண விழா பரபரப்பை கிளப்பியது. அதாவது, கடந்த வாரம் பெட்டியா மாவட்டத்தில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு தயாராக இருந்தனர். திருமண ஊர்வலமும் கோலாகலமாக நடந்திருக்கிறது. இருவீட்டாரின் குடும்பத்தினரின் வீடுகள் அலங்கரிக்கப்பட்டு, திருமண மண்டபமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஆட்டம், பாட்டம் மேளதாளத்துடன் மணமகன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். மணமகளும் திருமணத்திற்கு தயாராக இருந்துள்ளனர். பட்டாசு வெடிக்கப்பட்டு, கோலாகலமாக மணமகன் திருமண மண்டபத்திற்கு வந்தடைந்தார். தாலிக் கட்டும் நேரம் நெருங்கி விட்ட நிலையில், மணப்பெண், மணமகன் இருவரும் மணமேடையில் அமர்ந்திருந்தார். மணமகன் பார்வை குறைபாடு உள்ளவர். இதனை மறைத்து தான், மணமகன் திருமணம் செய்ய தயாராக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், மணமேடையில் இருந்தபோது, பார்வை குறைபாட்டை யாரும் பார்க்காமல் இருப்பதற்காக அவர் கண்ணாடி அணிந்திருந்தார். மணமேடையில் தாலிக் கட்டுவதற்கான சடங்குகள் நடந்துக் கொண்டிருந்தபோது, மணமகனுக்கு பார்வை குறைபாடு இருப்பதை அவர் கண்டுபிடித்தார். இதனால், கடுப்பான மணப்பெண், தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என மணமேமையில் இருந்து எழுந்து திருமணத்தை நிறுத்தினார்.
மணமகள் திருமணத்தை நிறுத்தியவுடன், இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏன் மணமகனுக்கு பார்வை குறைபாடு உள்ளதை மறைத்தீர்கள் என மணப்பெண் குடும்பத்தினர் கேட்டு சண்டையிட்டுள்ளனர். இதனால், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு குடும்பத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். மணப்பெண் மற்றும் மணமகனிடமும் பேசியுள்ளார். மணப்பெண் திருமணத்தை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால், திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், இருகுடும்பத்தினரும் சோகத்தை மூழ்கினர். எனவே, திருமண பந்தத்தில் சேரும் தம்பதியினர் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ