Bizarre News In Tamil: திருமணம் முடிந்த முதலிரவு அறைக்குச் சென்ற பிறகு, தனக்கு ரூ.90 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே தாம்பத்ய வாழ்க்கைக்கு ஒப்புக்கொள்வேன் என புதுமணப் பெண், மணமகனிடம் கூறியுள்ளார். இச்சம்பவம் இருவீட்டார் இடையே பெரும் மோதலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Bizarre News In Tamil: உத்தர பிரதேசத்தில் புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியிடம் ஏற்பட்ட பிரச்னையால் பெரும் மோதல் வெடித்து, வினோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
வழக்கமாக திருமணமான புதிதில் மட்டும்தானே கணவன் - மனைவி டையே பிரச்னை வராமல் இருக்கும். ஆனால், இந்த சம்பவத்தில் திருமணம் முடிந்த முதலிரவிலேயே பெரும் பிரச்னை வெடித்திருக்கிறது. இந்த பிரச்னை எல்லை கடந்து சென்றிருக்கிறது. இதுகுறித்து விரிவாக காணலாம்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரின் ஜகதிஷ்புரா பகுதியில் ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்தில் எந்த பிரச்னையும் இல்லை. ஜகதீஷ்புராவைச் சேர்ந்த மணமகன், மருத்துவரின் சகோதரர் ஆவார்.
மணமகள் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்தவர். திருமணம் முடிந்து, சடங்குகளை செய்துவிட்டு, மணமகளை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். கணவன் - மனைவி இருவரும் சாந்தி முகூர்தத்திற்கு தயாராகி அறைக்குள் நுழைந்திருக்கின்றனர்.
ஆனால், அப்போதுதான் மணமகனிடம், அந்த புதுமணப் பெண் பெரிய குண்டை தூக்கிப்போட்டுள்ளார். திருமண உறவை உறுதிசெய்யும் வகையில், முதலிரவுக்கு முன் தனக்கு ரூ.90 லட்சத்தை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். பணத்தை கொடுக்காவிட்டால் தாம்பத்ய உறவுக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் மணமகள் அடம்பிடித்துள்ளார்.
அவ்வளவு பெரிய தொகையை கேட்டதும் மணமகன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். சற்று நிதானத்திற்கு வந்து பணத்தை கொடுக்க முடியாது சொல்ல, புதுமண தம்பதிக்கு இடையே பெரும் வாக்குவாதம் வெடித்துள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் மணமகன் குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார், புதுமணப் பெண்ணுடன் எவ்வளவோ சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்துள்ளனர். ஆனால் புதுமணப்பெண் அடம்பிடித்திருக்கிறார். உடனே தனது குடும்பத்திருக்கும் அந்த பெண் தகவல் கொடுத்துள்ளார். மணப்பெண் குடும்பத்தாரும் அங்கு வர இருவீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, பிரச்னை கைமீறி போய்விட்டது. அங்கு மோதல் வெடித்திருக்கிறது.
மாப்பிள்ளை வீட்டு, மணமகள் குடும்பத்தார் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த பிரச்னையை தொடர்ந்து தங்களின் சொத்துக்களை மணமகள் வீட்டார் அடித்து உடைத்ததாகவும், தங்கள் வீட்டின் PNG எரிவாயு பைப்லைனை சேதப்படுத்தி, குடும்பத்தினர் வீட்டுக்குள் இருக்கும்போதே வீட்டுக்கு தீவைக்க முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.
அதாவது, மணமகள் வீட்டார் தங்களின் குடும்பத்தை வீட்டுக்குள் அடைத்து, கதவுக்கு பூட்டுபோட்டுவிட்டதாகவும், வீட்டுக்குள் எரிவாயுவை கசியவைத்து தீ விபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டி உள்ளனர். இறுதியில் குடும்பத்தினர் தீ விபத்து அலாரத்தை பயன்படுத்தி, பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்ததாகவும் கூறியுள்ளனர்.
போலீசாரிடம் மணமகனின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் பணத்திற்காக மட்டுமே இந்த திருமணத்திற்கே சம்மதித்ததாகவும் ஒப்புக்கொண்டதாக அந்த பெண்ணே கூறியுள்ளார்.
அவர் கேட்டது கிடைக்காததால் அவர் வீட்டில் இருந்த நகைகளையும், விலைமதிப்புள்ள பொருட்களையும் எடுத்துக்கொண்டு, அவரது குடும்பத்தை அழைத்ததாகவும் மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். பின்னர் மணப்பெண், தனது சொந்த பொருட்களையும், மாமியாருக்குச் சொந்தமான நகைகளையும் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மணமகன் குடும்பத்தினர் கூறுகையில், உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய பிறகே, ஜகதீஷ்புரா காவல் நிலையத்தில் மணப்பெண் மற்றும் அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவல்துறை தரப்பில் இச்சம்பவம் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், இருவீட்டாருக்கும் திருமண ஏற்பாட்டைச் செய்த தரகரையும் போலீசார் தீவிரமாக செய்துள்ளனர். அனைத்து குற்றச்சாட்டுகளையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கு பின்னணியில் மணமகன் வீட்டாரின் வரதட்சணை கோரிக்கை ஏதும் இருக்கிறதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ