Gujarat Crime News: சமீப நாட்களாகவே திருமண வீடுகளில் சண்டை, சச்சரவுகள் இருந்து வருகிறது. இருவீட்டாருக்கும் இடையே ஏற்படும் சண்டையில், கடைசியில் திருமணமே நின்று போகும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது. ஆனால், திருமண வீட்டில் கொலை நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியுள்ளது. அது வேறு எங்கும் இல்லை. வடமாநிலமான குஜராத்தில் நடந்துள்ளது.
கொலை வீடாக மாறிய திருமண வீடு
குஜராத்தின் பாவ்நகர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணம் நடைபெற இருந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண்ணை மணமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாஜன் பரய்யா. இவருக்கு சோனி ஹிமம்த் ரத்தோட் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக நிச்சியிக்கப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளும் இருவீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர். திருமணத்திற்காக முந்தைய சடங்குகளும் நிறைவடைந்தது. திருமணத்திற்கு அனைவரும் தயாராக இருந்தது. 2025 நவம்பர் 15ஆம் தேதி திருமண முகூர்த்தத்திற்கு சரியாக ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது. இந்த நேரத்தில், மணமகன், மணமகளுக்கு இடையே சண்டை வெடித்தது.
சஜன் பரையாவும், சோனி ஹிம்மத் ரத்தோட்டும் கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் லிவ் இன் உறவில் இருந்து, தற்போது திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தனர். திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, சேலை மற்றும் பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கு வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரத்தில், சஜன் சோனியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதனால், தலை பலத்த காயம் அடைந்த சோனி, ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்தார். இதனை அடுத்து, மணமகன் அறையில் இருந்து வெளியே வந்து அனைத்தையும் சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சோனியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மணப்பெண் கொலை
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணமகள் உயிரிழந்துவிட்டதாக கூறினர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஆர். சிங்கால் கூறுகையில், "அந்தத் தம்பதியினர் தங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒன்றரை வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். நேற்று அவர்களின் திருமணம் நடந்தது. சேலை மற்றும் பணம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இந்த வாக்குவாதத்தில் மணப்பெண்ணை மணமகன் இரும்பு கம்பியால் அடித்து, தலையை சுவற்றில் இடித்தும் கொலை செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நடுங்க வைத்த சம்பவம்.. துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை! காதலன் செய்த கொடூரம்
மேலும் படிக்க: இதுக்குலாமா Divorce பண்ணுவாங்க! கணவர் செய்த காரியம்.. ஒரே இரவில் முடிவு எடுத்த மனைவி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









