புது டெல்லி: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்கிறார். 2021 ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொண்டதாக இங்கிலாந்து அரசின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் (Dominic Raab) தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

27 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனின் சார்பில் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கலந்துக் கொள்கிறார். இதற்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் ஜான் மேஜர் (John Major) 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசு தின அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக கலந்துக் கொண்டார். 


கடந்த மாதம் நவம்பர் 27 அன்றுபிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமரை (Boris Johnson) தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரிடையாக அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அடுத்த ஆண்டு பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி 7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Also Read | இந்தியாவை 'வலுவான தேசமாக' மாற்றிய இரும்புமனிதர் வல்லபாய் படேலின் நினைவு தினம்


பிரிட்டிஷ் பிரதமரின் இந்தியப் பயணம் பிரிட்டனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பிரெக்ஸிட்டுக்கு (Brexit) பிறகு, இந்தியா (India) போன்ற முன்னணி பொருளாதாரங்களுடனான வர்த்தக உறவை வலுப்படுத்த பிரிட்டன் முயற்சிக்கிறது என்று சர்வதேச விவகார நிபுணர்கள் கூறுகின்றனர். வர்த்தக உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால், அந்நாட்டுப் பொருளாதாரம் கடுமையாக சேதமடையும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் பிரிட்டன் பிரதமரின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறலாம்.


மறுபுறம், பிரிட்டனிடம் இருந்து சுதந்திரத்தை போராடிப் பெற்ற இந்தியா, அதே நாட்டின் பிரதமரை இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி, ஒன்றுபட்ட இந்தியாவாக தலைநிமிர்ந்து பிரிட்டன் பிரதமரை சுதந்திர தின அணிவகுப்பு விழாவுக்கு அழைத்துள்ளது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR